இந்திய பணக்காரர்கள் பட்டியல்:
- இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- உலகின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளப்பட்டாலும், தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக நீடிக்கிறார்.
- ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார், உலகளவில் ஐந்தாவது பணக்காரப் பெண்ணாக முன்னேறியுள்ளார்.
- உலகப் பணக்காரப் பெண்களின் பட்டியலில் டாப் 10 இடத்தைப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
- உலகளவில் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
- உலகளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
- அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நகரின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
- அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், உலகளவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
இந்தியா – ரஷ்யா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி:
- ரஷ்யாவும் இந்தியாவும் 20 வருடங்களுக்கு மேலாக “இந்திரா” பயிற்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
- இந்த பயிற்சியின் நோக்கம் இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதே ஆகும்.
- இந்தியா தனது பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தவும், சா்வதேச ஒத்துழைப்பை வளா்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
- நிகழாண்டு இந்திய கடற்படையுடன், ரஷிய கடற்படையினா் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளனா்.
- இதற்காக ரஷியா கடற்படையின் ‘ரெஸ்கி’மற்றும் ‘ஹீரோ ஆல்டார் சைடென்ஷாபோவ்’என்ற 2 போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன.
குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு: இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு
- தடுக்கக்கூடிய குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியாவின் முயற்சிகள் முன்மாதிரியாக திகழ்வதாகக் கூறி ஐ.நா பாராட்டியுள்ளது.
- சுகாதார அமைப்பு முறையில் முதலீடுகளை செய்து, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின்மூலம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை இந்தியா காப்பாற்றியுள்ளதாகவும் ஐ.நா. சுட்டிக்காட்டியது.
- தடுக்கக் கூடிய குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியா, நேபாளம், செனகல், கானா மற்றும் புருண்டி ஆகிய 5 நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
- பிறந்த முதல் 28 நாள்களுக்குள் இறந்த குழந்தைகளின் விகிதமும் 61சதவீதமாக குறைந்துள்ளது.
- கருவில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
மார்ச் 28: உலக பியானோ தினம்.
- உலக பியானோ தினம் மார்ச் 28 இல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா
- தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள 6 – வது பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
- தமிழகத்தில் ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் 2 – ஆவது மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெறவுள்ளது.
- சிவகங்கை மாவட்டம், அரியக்குடி ரா.சண்முக ஷிவானி மாநில அளவிலான கவிதைப் போட்டியில் பங்கேற்று ‘இளம் கவிஞா்’விருது பெற்றார்.
- தென் அமெரிக்க நாடான சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட்.
- செர்பியாவின் வீரர் ஜோகோவிச் செபாஸ்டியன், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை வெற்றி பெற்றார்.