20th March Daily Current Affairs – Tamil

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்:

  • பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு ரூ11,185 கோடி மத்திய நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு வீட்டு வசதிக்கான நிதி உதவி வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புறம் (PMAY-U) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு முக்கிய வீட்டுவசதித் திட்டமாகும்.
  • இது நகர்ப்புறப் பகுதிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கில் 2015 இல் தொடங்கப்பட்டது.

வெம்பக்கோட்டை அகழாய்வில் முதன்முதலாகக் கிடைத்த ஈயம்:

  • வெம்பக்கோட்டை அருகே 3 – ஆம் கட்ட அகழாய்வில் முதன்முதலாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளது.
  • விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3 – ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18 – ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
  • 3 – ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.

மார்ச் 20: சர்வதேச மகிழ்ச்சி தினம்.

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 20: உலக சிட்டுக்குருவிகள் தினம்.

  • உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20 அன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.

மார்ச் 20: உலக வாய்வழி சுகாதார தினம்.

  • வாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20 ஆம் தேதி உலக வாய் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. இந்தியர்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் வெளிநாடுகள் குறித்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது, இதற்கு அடுத்தபடியாக செளதி அரேபியா உள்ளது.
  2. தெலுங்கானா அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்களின் நிதி நிலையை மேம்படுத்த நிதி உதவி மூலம் சுயவேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் ‘ராஜீவ் யுவ விகாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  3. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து 33 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 24 – வது இடத்தைப் பிடித்துள்ளது.
  4. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these