பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்:
- பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு ரூ11,185 கோடி மத்திய நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு வீட்டு வசதிக்கான நிதி உதவி வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புறம் (PMAY-U) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு முக்கிய வீட்டுவசதித் திட்டமாகும்.
- இது நகர்ப்புறப் பகுதிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கில் 2015 இல் தொடங்கப்பட்டது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் முதன்முதலாகக் கிடைத்த ஈயம்:
- வெம்பக்கோட்டை அருகே 3 – ஆம் கட்ட அகழாய்வில் முதன்முதலாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளது.
- விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3 – ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18 – ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- 3 – ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
மார்ச் 20: சர்வதேச மகிழ்ச்சி தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
மார்ச் 20: உலக சிட்டுக்குருவிகள் தினம்.
- உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20 அன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.
மார்ச் 20: உலக வாய்வழி சுகாதார தினம்.
- வாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20 ஆம் தேதி உலக வாய் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்தியர்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் வெளிநாடுகள் குறித்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது, இதற்கு அடுத்தபடியாக செளதி அரேபியா உள்ளது.
- தெலுங்கானா அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்களின் நிதி நிலையை மேம்படுத்த நிதி உதவி மூலம் சுயவேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் ‘ராஜீவ் யுவ விகாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து 33 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 24 – வது இடத்தைப் பிடித்துள்ளது.
- பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும்.