நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்
- சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் தலா 10 பெட்டிகளைக் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ 2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
- இந்த ரயிலுக்கான என்ஜின் மற்றும் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்தாண்டு தொடங்கப்பட்டது.
- வழக்கமான ரயில்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில்களால் சுற்றுச்சூழல் மாசு ஆகாது.
- உலகளவில் ஜொ்மனி, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- பெட்ரோல், டீசல் போன்ற பிற எரிபொருளால் இயங்கும் ரயில்கள் போன்று புகையை வெளியிடாமல், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் ரயில்கள் தண்ணீரை மட்டுமே வெளியிடும்.
- இதன் மூலம் கார்பன் உமிழ்வு இருக்காது.
- இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படவுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு:
- கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
- அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- ஜயமால்ய பாக்சியின் பதவியேற்பின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 – ஆக உயா்ந்துள்ளது.
- உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.
‘உடான்’திட்டம்:
- இது பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்.
- உதான் திட்டத்தின் முழு வடிவம் ‘உதே தேஷ் கா ஆம் நகரிக்’, இது நாட்டின் கிராமப்புறங்களை விமானம் மூலம் குறைந்த கட்டணத்தில் இணைக்கும் ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமாகும்.
- ‘உடான்’திட்டம், நாட்டின் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகும்.
- அனைத்து விமான நிலையங்களையும் ஒன்றாக இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இத்திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, மேலும் 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், முக்கிய விமான நிலையங்களின் நெரிசலைக் குறைக்கலாம்.
மார்ச் 18: ஆயுதத் தொழிற்சாலைகள் தினம்
- இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 ஆம் தேதி, ஆயுதத் தொழிற்சாலைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கி. மீ. தூரத்துக்கு இயக்கப்படவுள்ளது.
- இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு, பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
- கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
- சென்னை ஐஐடியில் விண்வெளி மற்றும் உந்து விசை ஆராய்ச்சிக்கு பயனுள்ள வகையில் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையத்தை இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் திறந்து வைத்தார்.
- திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையம் என்ற பெயரில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, “அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
- சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்களை அழைத்து வர டிராகன் விண்கலம், பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.
- அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரரான ஜேக் டிரேப்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.