தமிழ்நாடு முந்திரி வாரியம்:
- தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் முந்திரி அதிகமாக பயிரிடப்படுகிறது.
- முந்திரி தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டிற்கு 43 ஆயிரத்து 460 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
- நாட்டில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- எனவே, முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ரூ10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்பட உள்ளது.
மலைவாழ் உழவா் முன்னேற்றத் திட்டம்:
- வரும் நிதியாண்டில் (2025-26) மலைப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்காக குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப் பயிர்களில் பரப்பு விரிவாக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்க ரூ 22.80 கோடி ஒதுக்கப்பட்டு மலைவாழ் உழவா் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- இயற்கையோடு இணைந்து வாழ்ந்து சுற்றுச்சூழலுக்கும் உயிரியல் பன்மயத்துக்கும் உரிய பாதுகாப்பை மலைவாழ் உழவா்கள் உதவுகின்றனர்.
‘நல்லூா் வரகு, ‘நத்தம் புளி’ஐந்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நிதி ஒதுக்கீடு:
- நல்லூா் வரகு, நத்தம் புளி உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு தனித்துவமான புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
- 2025-26-இல் நல்லூா் வரகு (கடலூா்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 16: தேசிய தடுப்பூசி தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 அன்று, இந்தியாவில் தேசிய தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இது தேசிய நோய்த்தடுப்பு தினம் (IMD) என்றும் அழைக்கப்படுகிறது.
- இது முதன்முதலில் 1995 மார்ச் 16 அன்று வாய்வழி போலியோ தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டபோது அனுசரிக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- இந்தியா – சீனா இடையே கடந்த 2024 – ஆம் ஆண்டில் சராசரியை விட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி கடற்கரையில் கண்டறியப்பட்ட புதிய விலாங்கு மீன் இனத்திற்கு தமிழகம் என பெயரிடப்பட்டுள்ளது.
- ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ அமைக்கப்பட உள்ளது.
- இந்திய ஆடவர் அணி கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், மகளிர் அணி சீனியர் கோல்கீப்பர் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீர் சிங் சீனியர் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.