16th March Daily Current Affairs – Tamil

தமிழ்நாடு முந்திரி வாரியம்:

  • தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் முந்திரி அதிகமாக பயிரிடப்படுகிறது.
  • முந்திரி தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டிற்கு 43 ஆயிரத்து 460 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • நாட்டில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • எனவே, முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ரூ10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்பட உள்ளது.

மலைவாழ் உழவா் முன்னேற்றத் திட்டம்:

  • வரும் நிதியாண்டில் (2025-26) மலைப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்காக குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப் பயிர்களில் பரப்பு விரிவாக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்க ரூ 22.80 கோடி ஒதுக்கப்பட்டு மலைவாழ் உழவா் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இயற்கையோடு இணைந்து வாழ்ந்து சுற்றுச்சூழலுக்கும் உயிரியல் பன்மயத்துக்கும் உரிய பாதுகாப்பை மலைவாழ் உழவா்கள் உதவுகின்றனர்.

‘நல்லூா் வரகு, ‘நத்தம் புளி’ஐந்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நிதி ஒதுக்கீடு:

  • நல்லூா் வரகு, நத்தம் புளி உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு தனித்துவமான புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
  • 2025-26-இல் நல்லூா் வரகு (கடலூா்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 16: தேசிய தடுப்பூசி தினம்.

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 அன்று, இந்தியாவில் தேசிய தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது தேசிய நோய்த்தடுப்பு தினம் (IMD) என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது முதன்முதலில் 1995 மார்ச் 16 அன்று வாய்வழி போலியோ தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டபோது அனுசரிக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. இந்தியா – சீனா இடையே கடந்த 2024 – ஆம் ஆண்டில் சராசரியை விட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. தூத்துக்குடி கடற்கரையில் கண்டறியப்பட்ட புதிய விலாங்கு மீன் இனத்திற்கு தமிழகம் என பெயரிடப்பட்டுள்ளது.
  4. ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ அமைக்கப்பட உள்ளது.
  5. இந்திய ஆடவர் அணி கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், மகளிர் அணி சீனியர் கோல்கீப்பர் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீர் சிங் சீனியர் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these