தேஜஸ் போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை:
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- வானில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்கு மேல் பாய்ந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட அஸ்திரா ஏவுகணை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.
- இந்த ஏவுகணையில் மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்துதல் அமைப்புமுறைகள் உள்ளன.
- இவை, இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிப்பதை உறுதி செய்கின்றன.
- தேஜஸ் எல்சிஏ எம்கே1ஏ போர் விமானத்தில் பயன்படுத்தக் கூடிய அஸ்திரா ஏவுகணையின் பரிசோதனை, ஒடிஸாவின் சந்திப்பூா் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்பேடெக்ஸ் திட்டம்: இஸ்ரோ
- ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
- பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.
- அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
- இதற்காக தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரட்டை விண்கலன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன.
- இரு விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி- 60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
- ‘விண்வெளி டாக்கிங்’தொழில்நுட்பத்தை மேற்கொண்ட நான்காவது நாடு எனும் பெருமையை இந்தியா அடைந்தது.
- ‘ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- இது, மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’திட்டம், சந்திரனை ஆராய்வதற்கான ‘சந்திரயான்-4’, விண்வெளி மையம் அமைத்தல் உள்ளிட்ட நாட்டின் எதிர்காலத் திட்டங்களுக்கு வெற்றிகரமான அடித்தளத்தை அமைத்துள்ளது.
மார்ச் 14: சர்வதேச நதிகள் மீட்பு தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 அன்று, சர்வதேச நதிகள் மீட்பு தினம் கொண்டாடப்படுகிறது.
- இது ஆறுகளைப் பாதுகாப்பதற்கான குரல்களை எழுப்பவும், நதிகளுக்கான கொள்கைகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கையை எழுப்பவும் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலர்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனா்’ என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- 2028 – ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
- தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
- கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை கூழ்மரத்தோட்ட சாகுபடியை பண்ணைக்காடுகள் திட்டத்தின் கீழ் தொழில் நுட்பங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் ‘விவசாயிகளின் தொடா்பு’ என்ற கைப்பேசி தொடா்பு செயலியை டி.என்.பி.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தோ்வு செய்யப்பட்ட அறிவியல், கணித ஆசிரியா்களுக்கான தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
- இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
- பிரேசிலில் நடைபெறவுள்ள கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளில் 1000 அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.
- தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் ‘₹’ குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.