தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி:
- பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆா் மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா தடுப்பூசியைச் சோ்க்க பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
- குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே பரவும் பொன்னுக்கு வீங்கி எனப்படும் மம்ப்ஸ் நோயானது பாரமைக்ஸோ வைரஸால் பரவுகிறது.
- இது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
- உமிழ்நீா் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும்.
- தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆா். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் சில முக்கிய திட்டங்கள்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்:
- குடும்பப் பெண்களுக்கு மாதம் ₹1000 உதவித் தொகை வழங்கும் திட்டம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:
- அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்.
நான் முதல்வன் திட்டம்:
- இளைஞர்களின் திறமைகளை வளர்க்கும் திட்டம்.
புதுமைப்பெண் திட்டம்:
- கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.
தமிழ்ப் புதல்வன் திட்டம்:
- மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் திட்டம்.
தகவல் துளிகள்:
- மோரீஷஸ் தேசிய தினம் மார்ச் 12 – ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதில் சிறப்பு விருந்தினராகக் பிரதமா் மோடி கலந்துகொண்டார்.
- ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி. யும் 1908’ எனும் நூலுக்கு தமிழ்மொழிப் பிரிவில் 2024 – ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி.
- சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீா் சுத்திகரிப்பு ரசாயனம் (டிரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலம்) மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
- கடந்த 2024-இல் சொகுசு வீடுகளின் விலை உயா்வில் புது தில்லி சா்வதேச அளவில் 18-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
- கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது.
- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு “பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி” எனப் பெயரிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்தை வீழ்த்தி 3-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்திருக்கிறது.
- உக்ரைனைப் பாதுகாப்பதற்காக சர்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து 30 -க்கும் மேற்பட்ட நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் சந்திக்கின்றன.