அமெரிக்க–இந்திய வணிக கவுன்சில்:
- சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது.
- அமெரிக்கா-இந்தியா வணிக கவுன்சில் (USIBC), அமெரிக்கா மற்றும் இந்தியா முழுவதும் செயல்படும் சிறந்த உலகளாவிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
- இரு நாடுகளிலும் வணிகங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையே தொடர்புகளை உருவாக்குகிறது.
- இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் வாஷிங்டன் டிசியில் தலைமையகம் கொண்ட தங்கள் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
- USIBC அமெரிக்க வர்த்தக சபையின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
பாகிஸ்தான் சிந்து நதியில் தங்கம்:
- பாகிஸ்தானுக்குட்பட்ட சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- இதில் படிந்துள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவின் இமய மலையில் இருந்து சிந்து நதி உருவாகிறது.
- இமயமலைகளின் பாறைகள் வழியாக மில்லியன் ஆண்டுகளாக வழிந்தோடும் சிந்து நதியில், அரிப்பு ஏற்பட்டு தங்கத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- சிந்து நதி, திபெத்தின் உயரமான பீடபூமியில் உள்ள செங்கே சாங்பு என்ற இடத்தில் பிறக்கிறது.
- தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் இமாலய நதியாகும்.
- சிந்துவின் துணை நதிகள்: ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகும்.
இந்தியாவின் முதல் நதிக்கரை டால்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு:
- இந்தியாவின் முதல் நதிக்கரை டால்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.
- அறிக்கையில் எட்டு மாநிலங்களில் 28 ஆறுகளில் 6,327 டால்பின்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசம் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
- உத்தரபிரதேசம் அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில், கங்கை நதி டால்பின்கள் கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா நதி அமைப்பு மற்றும் அதன் துணை நதிகளில் வாழ்கின்றன.
- அதே நேரத்தில் சிந்து நதி டால்பின்களின் ஒரு சிறிய எண்ணிக்கை சிந்து நதி அமைப்பில் வாழ்கிறது.
தகவல் துளிகள்:
- இந்தியாவின் முதல் உலக அமைதி மையம் ஹரியானாவின் குருகிராமில் திறக்கப்பட்டது.
- முழு பட்ஜெட்டையும் கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சர் ஓ.பி. செளத்ரி.
- மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் தற்போது உத்திர பிரதேசத்தில் உள்ளன.
- அமெரிக்க பெண் பாலியல் தொழிலாளியின் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘அனோரா’, சிறந்த திரைப்படம் உள்பட 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது.
- காஸா மீதான இஸ்ரேல் படையெடுப்பை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘நோ அதர் லேண்ட்’ சிறந்த ஆவண திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.
- தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகாண்ட், சத்தீஸ்கர் அணிகள் வெற்றி பெற்றன.