ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’அந்தஸ்து:
- இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
- இதன்மூலம் 25 – ஆவது நிறுவனமாக ஐஆா்சிடிசியும், 26 – ஆவது நிறுவனமாக ஐஎஃப்ஆா்சியும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுள்ளன.
- ஐஆா்சிடிசி மற்றும் ஐஎஃப்ஆா்சிக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், இந்திய ரயில்வேயின்கீழ் இயங்கும் மொத்தமுள்ள 12 பொதுத் துறை நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட 7 பொதுத் துறை நிறுவனங்களும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
- நிதி மற்றும் வணிகச் சந்தையில் சிறப்பாக செயல்படும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்படுகிறது.
- இந்த அந்தஸ்தை பெறும் நிறுவனங்களின் மதிப்பு உயா்வதுடன் நிதிசார்ந்த முடிவுகளை விரிவாக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது.
- ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
97 வது ஆஸ்கர் விருதுகள்:
- 97 வது ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் நடைபெற்றது.
- சிறந்த நடிகர் – ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்)
- சிறந்த நடிகை – மிகே மேடிசன் (அனோரா)
- சிறந்த திரைப்படம் – அனோரா
- சிறந்த இயக்குநர் – சேன் பேக்கர் (அனோரா)
- சிறந்த திரைக்கதை – சேன் பேக்கர் (அனோரா)
- சிறந்த படத்தொகுப்பு – சேன் பேக்கர் (அனோரா)
- சிறந்த ஒளிப்பதிவு – லோல் க்ராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)
- சிறந்த துணை நடிகர் – கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
- சிறந்த துணை நடிகை – சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)
- சிறந்த பாடல் – எல் மால் (எமிலியா பெரெஸ்)
- சிறந்த பிண்ணனி இசை – டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூட்டலிஸ்ட்)
- சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்
- சிறந்த ஆவணக் குறும்படம் – தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
- சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐயம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
- சிறந்த அனிமேசன் திரைப்படம் – ஃப்ளோ
- சிறந்த அனிமேசன் குறும்படம் – இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – விக்கட்
- சிறந்த ஒலி வடிவமைப்பு – ட்யூன் 2
- சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ட்யூன் 2
- சிறந்த திரைக்கதை (தழுவல்) – பீட்டர் ஷ்ட்ராகன் (கான்கிளேவ்)
- சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) – ஐயம் நாட் எ ரோபாட்
- சிறந்த ஒப்பனை – தி சப்ஸ்டன்ஸ்
- சிறந்த ஆடை வடிவமைப்பு – பால் டேஸ்வெல் (விக்கட்)
- இதில், அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது.
- இயக்குநர் சேன் பேக்கர் 4 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
மார்ச் 4: தேசிய பாதுகாப்பு தினம்.
- இந்தியாவில் மார்ச் 4 – ஆம் தேதி தேசிய பாதுகாப்பு தினமாக இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 4: தேசிய இலக்கண தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் தேசிய இலக்கண தினம் மார்ச் 4 – ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- 2025 – ம் ஆண்டுக்கான 97 – வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
- 16 – ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் மே மாதம் தொடங்கவுள்ளது.
- குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7-ஆவதுகூட்டத்தை பிரதமா் தொடங்கி வைத்தார்.
- ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்கான ‘லயன் திட்டத்துக்கு’ரூ 2,900 கோடியை மத்திய அரசு அண்மையில் ஒதுக்கியது.
- தற்போது இந்தியாவில் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன.
- பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.