4th March Daily Current Affairs – Tamil

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’அந்தஸ்து:

  • இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
  • இதன்மூலம் 25 – ஆவது நிறுவனமாக ஐஆா்சிடிசியும், 26 – ஆவது நிறுவனமாக ஐஎஃப்ஆா்சியும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுள்ளன.
  • ஐஆா்சிடிசி மற்றும் ஐஎஃப்ஆா்சிக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், இந்திய ரயில்வேயின்கீழ் இயங்கும் மொத்தமுள்ள 12 பொதுத் துறை நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட 7 பொதுத் துறை நிறுவனங்களும் நவரத்னா அந்தஸ்தை பெற்றுவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
  • நிதி மற்றும் வணிகச் சந்தையில் சிறப்பாக செயல்படும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்படுகிறது.
  • இந்த அந்தஸ்தை பெறும் நிறுவனங்களின் மதிப்பு உயா்வதுடன் நிதிசார்ந்த முடிவுகளை விரிவாக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது.
  • ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

97 வது ஆஸ்கர் விருதுகள்:

  • 97 வது ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் நடைபெற்றது.
  • சிறந்த நடிகர் – ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்)
  • சிறந்த நடிகை – மிகே மேடிசன் (அனோரா)
  • சிறந்த திரைப்படம் –  அனோரா
  • சிறந்த இயக்குநர் – சேன் பேக்கர் (அனோரா)
  • சிறந்த திரைக்கதை – சேன் பேக்கர் (அனோரா)
  • சிறந்த படத்தொகுப்பு – சேன் பேக்கர் (அனோரா)
  • சிறந்த ஒளிப்பதிவு – லோல் க்ராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)
  • சிறந்த துணை நடிகர் – கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
  • சிறந்த துணை நடிகை – சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)
  • சிறந்த பாடல் – எல் மால் (எமிலியா பெரெஸ்)
  • சிறந்த பிண்ணனி இசை – டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூட்டலிஸ்ட்)
  • சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்
  • சிறந்த ஆவணக் குறும்படம் – தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
  • சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐயம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
  • சிறந்த அனிமேசன் திரைப்படம் – ஃப்ளோ
  • சிறந்த அனிமேசன் குறும்படம் – இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – விக்கட்
  • சிறந்த ஒலி வடிவமைப்பு – ட்யூன் 2
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ட்யூன் 2
  • சிறந்த திரைக்கதை (தழுவல்) – பீட்டர் ஷ்ட்ராகன் (கான்கிளேவ்)
  • சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) – ஐயம் நாட் எ ரோபாட்
  • சிறந்த ஒப்பனை – தி சப்ஸ்டன்ஸ்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு – பால் டேஸ்வெல் (விக்கட்)
  • இதில், அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது.
  • இயக்குநர் சேன் பேக்கர் 4 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

மார்ச் 4: தேசிய பாதுகாப்பு தினம்.

  • இந்தியாவில் மார்ச் 4 – ஆம் தேதி தேசிய பாதுகாப்பு தினமாக இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 4: தேசிய இலக்கண தினம்.

  • ஒவ்வொரு ஆண்டும் தேசிய இலக்கண தினம் மார்ச் 4 – ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. 2025 – ம் ஆண்டுக்கான 97 – வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
  2. 16 – ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் மே மாதம் தொடங்கவுள்ளது.
  3. குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7-ஆவதுகூட்டத்தை பிரதமா் தொடங்கி வைத்தார்.
  4. ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்கான ‘லயன் திட்டத்துக்கு’ரூ 2,900 கோடியை மத்திய அரசு அண்மையில் ஒதுக்கியது.
  5. தற்போது இந்தியாவில் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன.
  6. பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these