24th February Daily Current Affairs – Tamil

‘முதல்வா் மருந்தகம்’திட்டம்:

  • மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது.
  • திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்ட மருந்தகத்தை தொடங்கி வைக்கிறார்.
  • தொழில்முனைவோர் மூலமாக 500 மருந்தகங்களும், கூட்டுறவுத் துறை வழியாக 500 மருந்தகங்களும் என மொத்தம் 1,000 ‘முதல்வா் மருந்தகங்கள்’திறக்கப்படவுள்ளன.
  • ‘முதல்வா் மருந்தகம்’ 38 மாவட்டங்களிலும் தொடங்கப்படவுள்ளது.
  • நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய பாதிப்பு உள்ளவா்கள் தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது, இந்தச் சுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.

சீகன்பால்கு நினைவு தினம்:

  • தரங்கம்பாடியில் சீகன்பால்குவின் 306 – ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
  • டென்மார்க் நாட்டைச் சோ்ந்த சீகன்பால்கு கி.பி. 1706 ஜூலை 9 – ஆம் தேதி தரங்கம்பாடி வந்து சோ்ந்தார்.
  • 1715-ஆம் ஆண்டு ஜொ்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டு தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் கடுதாசிப் பட்டறையில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துகள் தயாரிக்கும் கூடத்தை அமைத்தார்.
  • அதன்பின் தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திசூடி போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார்.
  • ஆசியாவிலேயே முதல் தேவாலயமான புதிய எருசேலம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-இல் அமைத்திருக்கிறார்.
  • 1719 பிப்ரவரி 23 – ஆம் தேதி உயிரிழந்தார்.

பிப்ரவரி 24: மத்திய கலால் வரி தினம்.

  • 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி இயற்றப்பட்ட மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டத்தை நினைவுகூரும் வகையில் , 2023 ஆம் ஆண்டு மத்திய கலால் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் மறைமுக வரிகளை நிர்வகிப்பதற்கான பொறுப்பு கொண்ட அமைப்பு மத்திய கலால் வரி மற்றும் சுங்க வாரியம் ஆகும்.

தகவல் துளிகள்:

  1. மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
  2. தெலங்கானா மாநிலத்தின் யாதகிரிகுட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலில், தங்க முலாம் பூசப்பட்ட இக்கோயில் நாட்டின் மிக உயரமான தங்க கோபுரம் ஆகும்.
  3. தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி.
  4. மெட்ரோ வழித்தடத்தை 28.37 மீட்டர் உயரத்தில் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
  5. ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடமானது, மெட்ரோ ரயில் செல்லும் மிக உயரமான வழித்தடம் இதுவாகும்.
  6. பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் – அப்பா” எனும் செயலியை வெளியிட்டார்.
  7. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  8. நாட்டிலேயே முதன்முறையாக, மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படும் பத்மஜா நாயுடு இமயமலை உயிரியல் பூங்காவில், உயிரியல் வங்கி வசதி திறக்கப்பட்டுள்ளது.
  9. கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
  10. இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சாதனை சாம்பியன் பட்டம் வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these