‘முதல்வா் மருந்தகம்’திட்டம்:
- மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது.
- திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்ட மருந்தகத்தை தொடங்கி வைக்கிறார்.
- தொழில்முனைவோர் மூலமாக 500 மருந்தகங்களும், கூட்டுறவுத் துறை வழியாக 500 மருந்தகங்களும் என மொத்தம் 1,000 ‘முதல்வா் மருந்தகங்கள்’திறக்கப்படவுள்ளன.
- ‘முதல்வா் மருந்தகம்’ 38 மாவட்டங்களிலும் தொடங்கப்படவுள்ளது.
- நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய பாதிப்பு உள்ளவா்கள் தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது, இந்தச் சுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
சீகன்பால்கு நினைவு தினம்:
- தரங்கம்பாடியில் சீகன்பால்குவின் 306 – ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- டென்மார்க் நாட்டைச் சோ்ந்த சீகன்பால்கு கி.பி. 1706 ஜூலை 9 – ஆம் தேதி தரங்கம்பாடி வந்து சோ்ந்தார்.
- 1715-ஆம் ஆண்டு ஜொ்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டு தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் கடுதாசிப் பட்டறையில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துகள் தயாரிக்கும் கூடத்தை அமைத்தார்.
- அதன்பின் தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திசூடி போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார்.
- ஆசியாவிலேயே முதல் தேவாலயமான புதிய எருசேலம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-இல் அமைத்திருக்கிறார்.
- 1719 பிப்ரவரி 23 – ஆம் தேதி உயிரிழந்தார்.
பிப்ரவரி 24: மத்திய கலால் வரி தினம்.
- 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி இயற்றப்பட்ட மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டத்தை நினைவுகூரும் வகையில் , 2023 ஆம் ஆண்டு மத்திய கலால் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவில் மறைமுக வரிகளை நிர்வகிப்பதற்கான பொறுப்பு கொண்ட அமைப்பு மத்திய கலால் வரி மற்றும் சுங்க வாரியம் ஆகும்.
தகவல் துளிகள்:
- மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
- தெலங்கானா மாநிலத்தின் யாதகிரிகுட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலில், தங்க முலாம் பூசப்பட்ட இக்கோயில் நாட்டின் மிக உயரமான தங்க கோபுரம் ஆகும்.
- தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி.
- மெட்ரோ வழித்தடத்தை 28.37 மீட்டர் உயரத்தில் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
- ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடமானது, மெட்ரோ ரயில் செல்லும் மிக உயரமான வழித்தடம் இதுவாகும்.
- பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் – அப்பா” எனும் செயலியை வெளியிட்டார்.
- ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
- நாட்டிலேயே முதன்முறையாக, மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படும் பத்மஜா நாயுடு இமயமலை உயிரியல் பூங்காவில், உயிரியல் வங்கி வசதி திறக்கப்பட்டுள்ளது.
- கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சாதனை சாம்பியன் பட்டம் வென்றார்.