12th December Daily Current Affairs – Tamil

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை:

  • தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 1 டிரில்லியன் யுவான் செலவில், உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
  • இமயமலைப் பகுதியில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசத்துக்குள் பிரம்மபுத்திரா நதி பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில் அணை கட்டப்பட உள்ளது.
  • பிரம்மபுத்திரா ஆறு (Brahmaputra River) ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாகும்.
  • பிரம்புத்திரா நதி கயிலாய மலையிலிருக்கும் மானசரோவர் ஏரிக்கு கிழக்கில் உள்ள சேமாயங்டங் பனியாற்றில் (Chemayungdung Glacier) இருந்து உற்பத்தியாகிறது.
  • இந்நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற பெயரில் புறப்பட்டு, அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது.
  • சமவெளிப்பகுதியில் இது திகாங் என்று அழைக்கப்படுகிறது.
  • வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
  • அஸ்ஸாமின் உயிர்நாடியாக உள்ள பிரம்மபுத்திரா நதி, இந்தியாவின் செயல் திட்டங்களுக்கு முக்கிய சொத்தாகவும் விளங்குகிறது.
  • பிரம்மபுத்திரா நதி தான் இந்தியாவின் ஒரே “ஆண்” நதி என்று அழைக்கப்படுகிறது.
  • பிரம்மபுத்திரா ‘சிவப்பு நதி’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • பிரம்மபுத்திரா நதியின் துணை நதிகள்:
  • சுபன்சிரி ஆறு, கமெங் நதி, மானஸ் நதி, சங்கோஷ் நதி, டிஸ்டா நதி, திபாங் நதி, கோபிலி ஆறு, துத்னோய் ஆறு, சியாங் நதி.

2036 – ல் நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகை 60 கோடி:

  • 2036 – ஆம் ஆண்டில் நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை 60 கோடியை எட்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் அதிகரித்துவரும் நகரமயமாக்கல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் உருவாக்கி வருகிறது.
  • உள் கட்டமைப்பில் உள்ள இடைவெளி, காற்று மாசு அதிகரிப்பு, வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு, வாடகை உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற சவால்களை ஏற்படுத்துகிறது.
  • கல்விக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் நகரங்களை நோக்கி மக்கள் வருகின்றனர்.
  • தில்லியில் செயல்பட்டுவரும் பிரீமஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
  • இந்நிறுவனத்தின் ஆய்வுப்படி, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நகர்ப்புறத்தின் பங்களிப்பு 75% ஆக இருக்கும் எனவும் கணித்துள்ளது.

கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்கள்:

  • குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை என பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீா்வு காணும் பெண்களுக்கான நீதிமன்றத்தை (நாரி அதாலத்) அனைத்து மாநிலங்களிலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • ‘மிஷன் சக்தி’ திட்டத்தின்கீழ்’கிராமப் பஞ்சாயத்து அளவில் இயங்கி வரும் பெண்களுக்கான நீதிமன்றங்கள் திட்டம் தற்போது அஸ்ஸாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சோதனைக் கட்டத்தில் உள்ளது.
  • தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின்கீழ் (போஷன் அபியான்) பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்வதை வலியுறுத்தவும் அவா்களின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் ஆண்டுதோறும் போஷன் பக்வாடா என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது.

பிப்ரவரி 12: டார்வின் தினம்

  • பரிணாம உயிரியலின் தந்தை சார்லஸ் டார்வின் 1809 – ஆம் ஆண்டு பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 – ஆம் தேதி டார்வின் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 12: தேசிய உற்பத்தித்திறன் தினம்

  • இந்தியாவில் உற்பத்தித்திறன் கலாச்சாரத்தை அதிகரிப்பதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 12 அன்று இது அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாடு நடைபெற்றது.
  2. ஊட்டச்சத்து மற்றும் சுகாதார மேம்பாட்டில் சிறந்து விளங்கும் 1,000 கிராம பஞ்சாயத்துகளை தோ்ந்தெடுத்து விருது வழங்கும் சுபோஷித் பஞ்சாயத்து திட்டத்தை கடந்தாண்டு டிசம்பா் 26-இல் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  3. கர்நாடகா, பெங்களூருவில் முதலீட்டாளர் உச்சி மாநாடு பிப்ரவரி 12 முதல் 14 வரை நடைபெறுகிறது.
  4. தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
  5. உத்தரகண்டில் நடைபெறும் 38 – ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் 400 மீட்டா் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு தங்கப் பதக்கம் கிடைத்தது.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these