10th February Daily Current Affairs – Tamil

15 – ஆவது ஏரோ இந்தியா கண்காட்சி:

  • 15 – ஆவது ஏரோ இந்தியா விமான கண்காட்சி பெங்களூருவில் பிப்ரவரி 10 தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • நிகழாண்டு ‘கோடிக்கணக்கான வாய்ப்புகளின் ஓடுபாதை’ என்ற கருப்பொருளுடன் ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தி துறையின் பாதுகாப்பு கண்காட்சி நிறுவனம் நடத்துகிறது.
  • முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான ரஷியாவின் எஸ்யு-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 ஆகியவை பங்கேற்கவுள்ளன.
  • விமானப் படை தலைமை தளபதி அமா் பிரீத் சிங்.
  • ராணுவ தலைமைத் தளபதி உபேந்தி துவிவேதி.

கீழடி, சிவகளை உள்பட 20 இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு:

  • தமிழகத்தில் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூா் உள்பட 20 இடங்களில் தொடா்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
  • 2020 முதல் 2024 – ஆம் ஆண்டு வரை திருவள்ளூா் மாவட்டம் – சென்றாம்பாளையம், சிவகங்கை மாவட்டம் – கீழடி, தூத்துக்குடி மாவட்டம் – சிவகளை, ஆதிச்சநல்லூா், கொற்கை, ஈரோடு மாவட்டம் – கொடுமணல் உள்ளிட்ட 20 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • 2014 முதல் 2016 – ஆம் ஆண்டு வரை கீழடியில் இந்திய தொல்லியல் துறையால் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டது.
  • மாநில தொல்லியல் துறையால் 2020-ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் – கொடுமணல் பகுதியிலும், 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் – மயிலாடும்பாறை பகுதியிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 10: தேசிய குடற்புழு நீக்க நாள் (National Deworming Day).

  • தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி 10 – அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் குடற்புழு இல்லாத குழந்தையாக மாற்ற இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு முயற்சி இது.

பிப்ரவரி 10: உலக பருப்பு வகைகள் தினம் (World Pulses Day).

  • நிலையான உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாக பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக பிப்ரவரி 10 அன்று உலக பருப்பு வகைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

பிப்ரவரி 10: சர்வதேச வலிப்பு நோய் தினம்.

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை சர்வதேச கால்-கை வலிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம் ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது.
  2. பூமியின் நகரம் என அழைக்கப்படும் திரியா சவூதி அரேபியா தலைநகரான ரியாத்தின் புகர் பகுதிகளில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  3. அந்நிய நேரடி முதலீடு (FDI) என்பது தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் அமைந்துள்ள வணிகம் அல்லது நிறுவனத்தில் செய்யும் முதலீட்டைக் குறிக்கிறது.
  4. திருச்சி-கரூா் சாலை, காவிரிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
  5. விமானப் படை தலைமை தளபதி – அமா் பிரீத் சிங்.
  6. ராணுவ தலைமைத் தளபதி – உபேந்தி துவிவேதி.
  7. சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் சேலஞ்சர் போட்டி ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் கைரியன் ஜாக்கட் சாம்பியன் பட்டம் வென்றார்.
  8. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் ஆடவா் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் ஆதர்ஷ் ராமு 2.14 மீ உயரம் குதித்து தங்கப் பதக்கம் வென்றார்.
  9. ஆடவா் துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் தமிழக வீரர் பிரிதிவிராஜ் தொண்டைமான் தங்கம் வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these