15 – ஆவது ஏரோ இந்தியா கண்காட்சி:
- 15 – ஆவது ஏரோ இந்தியா விமான கண்காட்சி பெங்களூருவில் பிப்ரவரி 10 தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- நிகழாண்டு ‘கோடிக்கணக்கான வாய்ப்புகளின் ஓடுபாதை’ என்ற கருப்பொருளுடன் ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தி துறையின் பாதுகாப்பு கண்காட்சி நிறுவனம் நடத்துகிறது.
- முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான ரஷியாவின் எஸ்யு-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 ஆகியவை பங்கேற்கவுள்ளன.
- விமானப் படை தலைமை தளபதி அமா் பிரீத் சிங்.
- ராணுவ தலைமைத் தளபதி உபேந்தி துவிவேதி.
கீழடி, சிவகளை உள்பட 20 இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு:
- தமிழகத்தில் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூா் உள்பட 20 இடங்களில் தொடா்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
- 2020 முதல் 2024 – ஆம் ஆண்டு வரை திருவள்ளூா் மாவட்டம் – சென்றாம்பாளையம், சிவகங்கை மாவட்டம் – கீழடி, தூத்துக்குடி மாவட்டம் – சிவகளை, ஆதிச்சநல்லூா், கொற்கை, ஈரோடு மாவட்டம் – கொடுமணல் உள்ளிட்ட 20 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- 2014 முதல் 2016 – ஆம் ஆண்டு வரை கீழடியில் இந்திய தொல்லியல் துறையால் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டது.
- மாநில தொல்லியல் துறையால் 2020-ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் – கொடுமணல் பகுதியிலும், 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் – மயிலாடும்பாறை பகுதியிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 10: தேசிய குடற்புழு நீக்க நாள் (National Deworming Day).
- தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி 10 – அன்று அனுசரிக்கப்படுகிறது.
- நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் குடற்புழு இல்லாத குழந்தையாக மாற்ற இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு முயற்சி இது.
பிப்ரவரி 10: உலக பருப்பு வகைகள் தினம் (World Pulses Day).
- நிலையான உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாக பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக பிப்ரவரி 10 அன்று உலக பருப்பு வகைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 10: சர்வதேச வலிப்பு நோய் தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை சர்வதேச கால்-கை வலிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம் ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது.
- பூமியின் நகரம் என அழைக்கப்படும் திரியா சவூதி அரேபியா தலைநகரான ரியாத்தின் புகர் பகுதிகளில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
- அந்நிய நேரடி முதலீடு (FDI) என்பது தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் அமைந்துள்ள வணிகம் அல்லது நிறுவனத்தில் செய்யும் முதலீட்டைக் குறிக்கிறது.
- திருச்சி-கரூா் சாலை, காவிரிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- விமானப் படை தலைமை தளபதி – அமா் பிரீத் சிங்.
- ராணுவ தலைமைத் தளபதி – உபேந்தி துவிவேதி.
- சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் சேலஞ்சர் போட்டி ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் கைரியன் ஜாக்கட் சாம்பியன் பட்டம் வென்றார்.
- உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் ஆடவா் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் ஆதர்ஷ் ராமு 2.14 மீ உயரம் குதித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- ஆடவா் துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் தமிழக வீரர் பிரிதிவிராஜ் தொண்டைமான் தங்கம் வென்றார்.