ஐ.நா. பாதுகாப்பு அமைப்புகளில் சீா்திருத்தம்:
- ஐ.நா. பொதுச் சபையின் 79 – ஆவது அமா்வின் தலைவா் பிலேமோன் யாங் இந்தியா வந்துள்ளார்,
- இவர் கேமரூன் நாட்டைச் சோ்ந்தவர்.
- வளா்ச்சி நிதியுதவி தொடா்பான 4-ஆவது மாநாடு மற்றும் 3-ஆவது ஐ.நா. பெருங்கடல் மாநாடு போன்ற முக்கியமான ஐ.நா. மாநாடுகள் நிகழாண்டில் நடைபெறவுள்ளன.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட முக்கிய சா்வதேச அமைப்புகளின் விரைவான மற்றும் விரிவான சீா்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
- 1945 – ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC), ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும்.
- இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையில் புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வது மற்றும் ஐ.நா. சாசனத்தில் ஏதேனும் மாற்றங்களை அங்கீகரிப்பது ஆகியவற்றிற்கும் பொறுப்பாகும்.
- உறுப்பு நாடுகளுக்கு பிணைப்புத் தீர்மானங்களை வெளியிடும் அதிகாரம் கொண்ட ஒரே ஐ.நா. அமைப்பு இதுவாகும்.
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
- கவுன்சிலில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் 5 பேர் நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 பேர் நிரந்தரமற்றவர்கள்.
உதான் விமான திட்டம்:
- இது இந்திய அரசாங்கத்தின் ஒரு பிராந்திய விமான நிலைய மேம்பாட்டுத் திட்டமாகும் , மேலும் சேவை செய்யப்படாத விமான வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (RCS) ஒரு பகுதியாகும்.
- RCS திட்டம் பசுமை விமான நிலையங்களை அமைப்பது மற்றும் பிரவுன்ஃபீல்ட் விமான நிலையங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது.
- உடான் திட்டம் அக்டோபர் 21, 2016 அன்று தொடங்கப்பட்டது.
- இது ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமாகும்.
- உடான் திட்டத்தின் மூலம் விமானப் பயணம் இல்லாத பகுதிகளை விமான இணைப்புடன் இணைக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
நமோ ட்ரோன் தீதி திட்டம்:
- நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது.
- பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதற்காக டிரோன்களை வழங்கும் மத்திய அரசின் திட்டம்தான் நமோ டிரோன் தீதி திட்டமாகும்.
- 2023-24 முதல் 2025-26 வரையிலான 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 15,000 ட்ரோன்களை வழங்கி நிலையான வணிகம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக உதவி செய்யும் நோக்கில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
- இந்த 500 டிரோன்கள் நமோ தீதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் 44 பெண்கள் என்ற வகையில் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகவல் துளிகள்:
- பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக, சக்தி மென்பொருள் மேம்பாட்டிற்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடனும் ரூ 10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொள்ளப்பட்டது.
- மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
- உடான் திட்டம் என்பது, இந்தியாவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் அதிகளவில் சேருவதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு கல்வித் திட்டம் ஆகும்.
- ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்டில் சூரஜ்குண்ட் கைவினை மேளா பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 23, 2025 வரை கொண்டாடப்படுகிறது.
- தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழகம், புதுச்சேரியை வீழ்த்தி தங்கம் வென்றது.