இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்:
- நாட்டின் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘மேக் இன் இந்தியா’(இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தை மத்திய அரசு 2014 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது.
- இந்த திட்டம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, புதுமைகளை ஊக்குவிப்பது, திறன் மேம்பாட்டை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் உத்திசார் தலையீடுகளுடன், இந்திய தயாரிப்புகள் மிக உயர்ந்த உலகளாவிய தரங்களை பூர்த்தி செய்வதை இந்த முயற்சி உறுதி செய்கிறது.
- புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் 2016 ஜனவரி 16 அன்று ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியை அரசு தொடங்கியது.
புதிய கூட்டுறவு சங்க பல்கலைக்கழகம்:
- கூட்டுறவு சங்கங்களுக்கு திறன்மிகுந்த பணியாளா் வளத்தை உருவாக்கும் நோக்கில் புதிதாக கூட்டுறவு சங்கப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் கிஷன் பால் ‘திரிபுவன் சஹகாரி பல்கலைக்கழக மசோதா’என்ற பெயரிலான இந்த மசோதாவை அறிமுகம் செய்தார்.
- கூட்டுறவு சங்க பணிக்கான தற்போதைய கல்வி முறையும் பயிற்சித் திட்டங்களும் போதுமானதாக இல்லை. மேலும், அவை ஆங்காங்கே தனித்தனியாக உள்ளன.
- இந்த நிலையை மாற்றவும், கூட்டுறவுத் துறையில் தகுதிவாய்ந்த பணியாளா்களின் வருங்காலத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையிலும் இந்த மசோதாவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய வம்சாவளி அமெரிக்க பாடகி சந்திரிகாவுக்கு கிராமி விருது:
- உலக இசைக் கலைஞா்களை கௌரவிக்க ‘ரெக்கார்டிங் அகாதெமி’அமைப்பால் நடத்தப்படும் 67 – ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது.
- இதில் சிறந்த நவீனகால இசை ஆல்பம் பிரிவில் ‘திரிவேணி’ இசை ஆல்பத்துக்காக பாடகி சந்திரிகா கிருஷ்ணமூா்த்தி டாண்டன் வென்றார்.
- இந்த இசை ஆல்பத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
- சென்னையைப் பூா்விகமாகக் கொண்ட இவர் அமெரிக்க பாடகியும் தொழிலதிபரும் ஆவார்.
- இது அவரது இரண்டாவது கிராமி விருது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2009 – இல் வெளியான ‘சோல் கால்’இசை ஆல்பத்துக்காக சந்திரிகா தனது முதல் கிராமி விருதை வென்றிருந்தார்.
பிப்ரவரி 4: உலக புற்றுநோய் தினம்.
- புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிக்கவும், அதன் தாக்கத்தைக் குறைக்க உலகளாவிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 – ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த 2025 – ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள்: ” ஒற்றுமையால் ஒன்றிணைதல் “, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனிப்பயனாக்கப்பட்ட, நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பின் முக்கிய பங்கை வரையறுக்கிறது.
தகவல் துளிகள்:
- இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிர அரசு அலுவலகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி உத்தரவிட்டது.
- புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவு தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
- நெதா்லாந்தில் நடைபெற்ற 87 – ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.