2nd February Daily Current Affairs – Tamil

ஜல் ஜீவன் திட்டம்:

  • அனைத்து கிராமப்புற குடியிருப்புகளுக்கும் குழாய் மூலம் நீர் வழங்குவதை உறுதிசெய்யும் ஜல் ஜீவன் திட்டத்தை 2028 – ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
  • முன்னதாக இத்திட்டத்தை 2024 – ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
  • இத்திட்டத்துக்கு ரூ 67,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • குடிமக்களுக்கான நீர் சேவைகளை நிறைவேற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தனித்தனி புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

புதிய வருமான வரி மசோதா:

  • தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய வருமான வரிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • வரி செலுத்துவோருக்கு வருமான வரி கணக்கு தாக்கலை எளிமைப்படுத்த மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம், 99 சதவீத வருமான வரி கணக்கு தாக்கல் தற்போது சுய ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் நேரடி வரி விதிப்பு, தனிநபர் வருமான வரி, நிறுவனங்கள் வரி, பத்திர பரிவர்த்தனை வரி, பரிசுப் பொருள்கள் மற்றும் சொத்து வரி என 23 தலைப்புகளின் கீழ் 298 பகுதிகளாக சட்ட விதிகள் இடம்பெற்றுள்ளன.
  • இந்தப் பக்கங்களை 60 சதவீதம் அளவுக்குக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • ‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி’ என்ற திருக்குறளை நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார்.

மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம்:

  • மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • விரைந்து பயணிக்க வேண்டும் என்ற 1.5 கோடி நடுத்தர வா்க்க மக்களின் விருப்பத்தை உடான் திட்டம் நிறைவேற்றியுள்ளதுஇந்தத் திட்டத்தின் கீழ், 88 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டு 619 வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
  • UDAN என்பது இந்திய அரசாங்கத்தால் (GoI) வழிநடத்தப்படும் ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமாகும்.
  • UDAN இன் முழு வடிவம் ‘உதே தேஷ் கா ஆம் நாகரிக்’ மற்றும் பொதுவான குடிமக்கள் விமான சேவைகளை எளிதாக அணுகுவதற்கு சிறிய பிராந்திய விமான நிலையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2025-26: முக்கிய அம்சங்கள்.

  • 2025 – ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
  • கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற நடவடிக்கை.
  • கிராமப்புறங்களில் கூடுதலாக 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.
  • மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.
  • உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.
  • முதல் முறையாக தொழில்முனைவோராகத் தொடங்கும் பட்டியலின மற்றும் பழங்குடி பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்.
  • தேசிய பொம்மைகளுக்கான செயல்திட்டம் மூலமாக பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.
  • வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
  • நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும்.
  • உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 6 வகை மருந்துகளுக்கு 5 சதவிகிதம் வரியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நடுத்தர வர்க்கத்தினருக்கு ரூ.12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் ரூ 12 லட்சம் வரை இருந்தால், வருமான வரி கிடையாது.

பிப்ரவரி 2: உலக ஈரநில தினம்.

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் தேதி, உலக சதுப்பு நில தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.
  • ஈரானின் ராம்சார் நகரில் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி ஈரநிலங்கள் தொடர்பான மாநாட்டை ஏற்றுக்கொண்ட தேதியை இந்த நாள் குறிக்கிறது.
  • இது முதன்முதலில் 1997 இல் கொண்டாடப்பட்டது.

தகவல் துளிகள்:

  • சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 62,955.7 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
  • டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.
  • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38 – ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் தமிழக அணி வீராங்கனை லேகாமல்யா, பளுதூக்குதலில் 71 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார்.
  • இந்தியாவை 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட ஒரு பெரிய தளவாட அமைப்பாக மாற்றும் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட யூரியா ஆலையை அமைக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.
  • ஒடிஸா மாநில கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் நடைபெற்ற குறுகிய தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
  • முப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these