19th January Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் JANUARY 19

 

ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின்கீழ் 70 வயதான 6 கோடி பேர் இணைப்பு:

  • ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த 6 கோடி பேர் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
  • ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த 2018 – இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட உள்ளது.
  • அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.
  • குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிலையத்தில் சுகாதார மாநாடு 2025 நடைபெற்றது.
  • இந்தியாவில் கடந்த 2015 – ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023 – ஆம் ஆண்டில் காசநோய் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 17.7 சதவீதம் குறைந்துள்ளது.

உலக பொருளாதார மன்ற கூட்டம்: சுவிட்சர்லாந்து.

  • சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் ஜனவரி 20 – ஆம் தேதி முதல் உலக பொருளாதார மன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது.
  • சுவிட்சா்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு பங்கேற்க உள்ளது.
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) என்பது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள கொலோனியை தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பு மற்றும் சிந்தனைக் குழு ஆகும்.
  • இது 24 ஜனவரி 1971 இல் ஜெர்மன் பொறியியலாளர் கிளாஸ் ஸ்வாப் என்பவரால் நிறுவப்பட்டது.

ஜனவரி 19: கோக்போரோக் தினம்.

  • ஜனவரி 19 அன்று, இந்திய மாநிலமான திரிபுரா கோக்போரோக் மொழியை வளர்ப்பதற்காக திரிபுரி மொழி தினம் என்று அழைக்கப்படும் கோக்போரோக் தினத்தை அனுசரிக்கிறது. இந்த நாள் 1979 – ஆம் ஆண்டு முதல் முறையாக கொக்போரோக் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • 21 ஜனவரி 1972 அன்று, திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்கள் 1971 ஆம் ஆண்டின் வடகிழக்கு பிராந்திய  சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக மாறியது.
  • எனவே, திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகியவை ஜனவரி 21 அன்று தங்கள் மாநில தினத்தை கொண்டாடுகின்றன.

தகவல் துளிகள்:

  • விவசாய அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 55 – ஆவது நாளாக உண்ணாவிரதம்.
  • விவசாயிகள் சங்க தலைவர் சுக்ஜீத் சிங் ஹர்டோஜண்டே.
  • இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்திச் சூழலை வளா்க்க இந்தியா-சிங்கப்பூா் அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன.
  • சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தா்மன் சண்முகரத்னம்.
  • இந்திய ராணுவ துணைத் தளபதி ராஜா சுப்பிரமணி.
  • இணைய (சைபா்) குற்ற புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு கையொப்பமாகி உள்ளது.
  • மணிப்பூர் மாநில ஆளுநா் அஜய் குமார் பல்லா.
  • மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது.
  • இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார மையத்துக்கு தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிலையத்தில் சுகாதார மாநாடு 2025 நடைபெற்றது.
  • வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் நிகழ்வானது ஜனவரி 21 ஆம் தேதி நிகழவிருக்கிறது.
  • விஜய் ஹசாரே கோப்பை, கர்நாடகம் 5 – வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these