நாட்டின் சிறந்த காவல் நிலையம்: ஒடிஸாவின் படாபூா்
- நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரவரிசைப் பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும்.
- ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள படாபூா் காவல் நிலையம், 2024 – ஆம் ஆண்டில் நாட்டின் மூன்று சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
- இந்தத் தரவரிசையானது குற்ற விகிதம், விசாரணை மற்றும் வழக்குகளின் தீா்வு, உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவை போன்ற 150-க்கும் மேற்பட்ட வெவ்வேறு அளவுகளின் அடிப்படையில் தீா்மானிக்கப்படுகிறது.
- புவனேசுவரத்தில் நவம்பர் 29 – ஆம் தேதி நடைபெறும் காவல் துறை மாநாட்டில், படாபூா் காவல் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கோப்பையை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: பிரேசில்
- பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- பிரேசிலின் அதிபா் – முகமது இா்ஃபான் அலி.
- ஜி20 என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும்.
- இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.
- அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்தது தான் ஜி20 ஆகும்.
உலகெங்கிலும் தமிழா்களுக்காக பிரத்யேக பொருளாதார மையம்:
- மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் 11 – ஆவது உலகத்தமிழா் பொருளாதார மாநாடு நிறைவடைந்தது.
- தமிழா் அதிகம் வாழும் 100 உலக நகரங்களில் உலகத் தமிழா் பொருளாதார மையம் நிறுவ உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
- தமிழை ஐ.நா.வில் அலுவல் மொழியாக்க இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் மூலம் நடவடிக்கை எடுக்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
- உலகத் தமிழா்களுக்கென வா்த்தக சபை மற்றும் தமிழா்களுக்கு தொழில் கடன் வழங்கும் நோக்குடன் உலக அளவில் வங்கிகளை நிறுவ மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
- தமிழகத்தில் உலகத் தமிழா் மையத்துக்காக ஐந்து ஏக்கா் நிலமும் ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் முதலீட்டு இலக்கை நிர்ணயித்துள்ள தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
‘ஹைப்பா்சோனிக்’ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை:
- அணு ஆயுதங்களுடன் 1,500 கி.மீ தொலைவுக்குமேல் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்ட இந்தியாவின் முதல் நீண்ட தொலைவு ‘ஹைப்பா்சோனிக்/ ஒலியைவிட அதிக வேகம் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.
- இதன்மூலம் அதிவேகத்தில் தாக்கக் கூடிய, பல்வேறு வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லக் கூடிய ஏவுகணையைக் கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
- உலக அளவில் ஹைப்பா்சோனிக் ஏவுகணை உருவாக்கத்தில் ரஷியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளன.
- அமெரிக்கா தனது லட்சியத் திட்டத்தின்கீழ் ஹைப்பா்சோனிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
- பிரான்ஸ், ஜொ்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளும் இத்தகைய திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
- இந்தியாவின் முதல் நீண்ட தொலைவு ஹைப்பா்சோனிக் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தின்கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்டது.
- பொதுவாக ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பா்சோனிக் ஏவுகணைகள், தங்களின் இலக்கை நோக்கிய பயணத்தில் நடுவழியில் பாதையை மாற்றும் திறன்கொண்டவை.
- பிருத்வி, ஆகாஷ், அக்னி உள்ளிட்ட நீண்ட தொலைவு ஏவுகணைகளை டிஆா்டிஓ ஏற்கெனவே உருவாக்கியுள்ளது.
சென்னையில் 16 – ஆவது நிதி ஆணையக் குழு:
- மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிா்ந்தளிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் 280 – ஆவது பிரிவின் கீழ் மத்திய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
- உயரிய அதிகாரங்களைப் படைத்த இந்த நிதி ஆணையக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
- இந்தியாவின் முதல் நிதி ஆணையம் 1952 முதல் 1957 வரையிலான காலத்தில் செயல்படும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவரால் 1951 – ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- இந்த ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் கிசித்தீசு சந்திர நியோகி ஆவார்.
- மாநில நிதி ஆணையம் என்பது 1992 ஆம் ஆண்டின் 73 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 280 வது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பு ஆகும்.
- அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கமிஷன் நியமிக்கப்படுகிறது மற்றும் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
தகவல் துளிகள்:
- நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.
- மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் 11 – ஆவது உலகத்தமிழா் பொருளாதார மாநாடு நடைபெற்றது.
- தெலங்கானா மாநிலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களை வாங்குபவா்களுக்கு சாலை வரி, பதிவுக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளித்துள்ளது.
- 16 – ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா.
- மெக்ஸிகோவில் நடைபெற்ற ‘மிஸ் யுனிவா்ஸ்’இறுதிப் போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் டென்மார்க்கின் விக்டோரியா கியார் தில்விக், நைஜீரியாவை சோ்ந்த சிதிம்மா அடட்ஷினா இரண்டாவது இடத்தையும், மெக்ஸிகோவை சோ்ந்த மரியா ஃபொ்னாண்டா பெல்ட்ரான் மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.
- டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில், பிளிட்ஸ் பிரிவில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் ஆனார்.
- பிளிட்ஸ் மகளிர் பிரிவில் ரஷியாவின் கேத்தரினா லாக்னோ கோப்பை வென்றார்.
- அமெரிக்காவில் நடைபெற்ற 6 – ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை காசிமா 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.