15th November Daily Current Affairs – Tamil

பிர்சா முண்டா: 50 – ஆவது பிறந்த தினம்

  • பழங்குடியினர் விடுதலைப் போராட்டவீரர் பிர்சா முண்டாவின் 50 – ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
  • ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார்.
  • 1875 – இல் பிறந்த அவர், தனது பழங்குடி கிராம மக்களுக்கு எதிரான சுரண்டலின் தன்மையைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார் .
  • அவர் ஒரு நேர்மறையான அரசியல் திட்டத்திற்காக பாடுபட்டார்.
  • அவருடைய நோக்கம் மத மற்றும் அரசியல் சுதந்திரத்தை அடைவதாகும் .
  • இந்த இயக்கம் மண்ணின் உண்மையான உரிமையாளர்களாகிய முண்டாக்களின் உரிமைகளை நிலைநாட்ட முயன்றது.
  • பிர்சா முண்டா பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார்.
  • இதனால், ‘நிலத்தின் தந்தை’ எனப் பழங்குடினரால் அவர் அழைக்கப்பட்டார்.
  • பிர்சா முண்டாவில் பிறந்தநாளையொட்டி பிகார் மாநிலத்தில், பிரதமர் மோடி ரூ 6000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி தொடங்கிவைக்கிறார்.
  • 2000 – ஆம் ஆண்டு பிர்சா முண்டாவில் பிறந்த நாளையொட்டி பிகார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.

முண்டா கிளர்ச்சி:

  • 19 – ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிர்சா முண்டா தலைமையில் சோட்டாநாக்பூர் பகுதியில் உள்ள பழங்குடி சமூகங்கள் மீதான பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராக போராடிய பழங்குடி இயக்கமாகும்.
  • இது Ulgulan அல்லது The Great Tumult என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த எழுச்சிக்கான காரணம் மற்ற கிளர்ச்சிகளைப் போலவே இருந்தது – பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள், ஜமீன்தார்கள் மற்றும் மிஷனரிகள்.
  • முண்டாக்கள் குன்ட்கட்டி முறையை கடைப்பிடித்தனர், அங்கு முழு குலமும் சேர்ந்து சாகுபடிக்கு ஏற்ற நிலத்தை வைத்திருந்தனர்.
  • இந்த இயக்கம் மண்ணின் உண்மையான உரிமையாளர்களாகிய முண்டாக்களின் உரிமைகளை நிலைநாட்ட முயன்றது.

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு கூட்டம்:

  • நவம்பர் 19 – ஆம் தேதி நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
  • பொதுக் கணக்குக் குழு என்பது இந்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைத் தணிக்கை செய்யும் நோக்கத்திற்காக இந்திய நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.
  • ஆண்டுதோறும் பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு ஆண்டு ஆகும்.
  • குழுவின் தலைவர் மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படுகிறார்.
  • 1967 ல் இருந்து குழுவின் தலைவராக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
  • அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது.
  • பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது:

  • கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டிருந்த 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில், டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதால், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருது வழங்கப்படவுள்ளது.
  • பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக, அவருக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருதை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்த விருதை, கயானாவின் ஜார்ஜ்டவுனில் நவம்பர் 19 முதல் 21 வரையில் நடைபெறும் இந்தியா – கரிகாம் (CARICOM – The Caribbean Community and Common Market) உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடிக்கு காமன்வெல்த் டொமினிகா தலைவர் சில்வானி பர்ட்டன் வழங்கவுள்ளார்.

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பு சோதனை:

  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பின் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • ‘மதிப்பீட்டு தர காரணிகளின் செயல்பாட்டினை ஆராயும் விதமாக டிஆா்டிஓவால் பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
  • பல்வேறு பகுதிகளில் உள்ள இலக்கை தாக்கும் விதமாக மூன்று கட்டங்களாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • பினாகா ஆயுத அமைப்பை தயாரித்த ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் பன்னிரெண்டு ராக்கெட்டுகள், மேம்படுத்தப்பட்ட இரு பினாகா ஏவுகலன்களில் இருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
  • பலமுனை தாக்குதலில் ஈடுபடும் இந்த பினாகா ரக ராக்கெட் ஏவும் அமைப்புகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், லார்சன் மற்றும் டா்போ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள்/ அமைப்புகள் இணைந்து தயாரித்துள்ளன.

நவம்பர் 15: குருநானக் தேவ் பிறந்த தினம்

  • ஒவ்வொரு ஆண்டும், குருநானக் ஜெயந்தி சீக்கிய நிறுவனர் குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 15: பிர்சா முண்டா ஜெயந்தி

  • பிர்சா முண்டா, ஒரு மத மற்றும் பழங்குடி சுதந்திர போராட்ட வீரர், நவம்பர் 15, 1875 அன்று ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டுவில் பிறந்தார்.

நவம்பர் 15: ஜார்க்கண்ட் நிறுவன தினம்

  • ஜார்கண்ட் நவம்பர் 15, 2000 அன்று உருவாக்கப்பட்டது.
  • பீகார் மறுசீரமைப்பு சட்டம் இந்தியாவின் 28 – வது மாநிலமாக பீகாரை நிறுவியது.

தகவல் துளிகள்:

  1. செபி (Securities and Exchange Board of India) தலைவர் – மாதவி புச்.
  2. இந்தியா – கரிகாம் (CARICOM) உச்சி மாநாடு, கயானாவின் ஜார்ஜ்டவுனில் நவம்பர் 19 முதல் 21 வரையில் நடைபெற உள்ளது.
  3. ’ஆபரேஷன் கவாச்’என்பது தில்லி காவல்துறை அவ்வப்போது தங்கள் பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.
  4. தில்லியின் புதிய மேயராக மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார்.
  5. மேகாலயா மாநிலத்தில் செயல்படும் ஹைனிவ்ரெப் தேசிய விடுதலை கவுன்சில் (ஹெச்என்எல்சி) கிளா்ச்சி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
  6. எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்து வரும் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில், ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்கப்படுகின்றன.
  7. வளரும் நாடுகள் பருவநிலை மாற்றச் சவால்களை சமாளிக்கவும், பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடையவும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலரை திரட்டுவது குறித்து அஜா்பைஜானில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு (சிஓபி29) மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பருநிலை நிதி தொடா்பான உயா்நிலை நிபுணா் குழுவின் புதிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these