13th November Daily Current Affairs – Tamil

11-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு:

  • உலகத் தமிழர்களின் தொழில்முனைவு மற்றும் பொருளாதாரத்தை, கோலாலம்பூரில் நவம்பர் 15 முதல் 17 – ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும் என்று மாநாட்டு அமைப்புத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.
  • இந்த மாநாட்டை தமிழக அரசு சார்பில் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
  • மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி தலைமை வகிக்கிறார்.
  • மாநாட்டின் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நிறைவுரையாற்றுகிறார்.
  • தமிழர்களின் தொழில் திறன்களையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
  • 11 – ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கோலாலம்பூரில் நடத்தப்படுகிறது.
  • உலகத் தமிழர் பொருளாதார மாநாடு முதல் முறையாக சென்னையில் (2009) நடத்தப்பட்டது.

நீண்ட தூர தரை இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை:

  • நீண்ட தூரம் சென்று தரை இலக்கை தாக்கும் ஏவுகணையின் முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • எதிர்காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
  • ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • பெங்களூருவில் உள்ள வானூா்தி மேம்பாட்டு நிறுவனம், டிஆா்டிஓவின் ஆய்வகங்கள் மற்றும் பிற இந்திய தொழிற்சாலைகளால் எல்ஆா்எல்ஏசிஎம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஹைதராபாதில் உள்ள பாரத் டைனமிக்ஸ் மற்றும் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இந்த ஏவுகணையின் மேம்பாடு மற்றும் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
  • இந்த ஏவுகணைத் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறையின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • நிலத்திலிருந்து மட்டுமல்லாமல் கப்பல்களில் இருந்தும் இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு:

  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ( சிஐஎஸ்எஃப்) பிரிவை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இதில் 1,025 பெண் காவலா்களை உள்ளடக்கிய நாட்டின் முதல் அனைத்து பெண் படைப் பிரிவை மூத்த காமண்டா் தலைமையில் அமைக்க அனுமதியளித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.
  • ‘சிஐஎஸ்எஃப் தற்போது 12 படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  • அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் (7%) கூட்டாக பணியாற்றுகின்றனா், இந்நிலையில் முதல் அனைத்து பெண்கள் படைப்பிரிவு அமைக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம்:

  • மாநில அளவில் ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம் அமைக்க முன்மொழியும் வரைவு மசோதா, அனைத்து மாநிலங்களின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் திரிவேணி நீா் நிறுவனம் சார்பில் 10 – ஆவது நீா் புத்தாக்க மாநாடு, தில்லியில் தொடங்கியது.
  • வளா்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்கு பார்வையின்கீழ் நீா் பாதுகாப்பை எட்டும் நோக்கில், மாநில அளவில் ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நீா் பாதுகாப்பு, நிலத்தடி நீா் மேலாண்மை, வெள்ளப்படுகை மேலாண்மைக்கான திட்டங்களை வகுப்பதோடு, நீா் சார்ந்த பல்வேறு துறைகள்-முகமைகளை ஒருங்கிணைப்பதும் ஆணையத்தின் பொறுப்பாகும்.
  • மாநில அளவில் முதல்வா் தலைமையிலான குழுவின்கீழ் ஆணையம் செயல்படும்.

நவம்பர் 13: உலக கருணை தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13 – ஆம் தேதி உலக கருணை தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. மும்பையில் ஆப்கானிஸ்தான் பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் காமிலை தலிபான் அரசு நியமித்துள்ளது.
  2. நைஜீரிய நாட்டின் அதிபா் – போலா அகமது.
  3. பிரேஸிலில் ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 18 இல் நடைபெற உள்ளது.
  4. சீனா, தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எபிகிளோரோஹைட்ரின் ரசாயனத்துக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது, ஒட்டுப்பசை துறையில் எபிகிளோராஹைட்ரின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.
  5. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அடுத்தாண்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
  6. காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் மாற்றம் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய சாம்ராட் சௌதரி தலைமையில் பல்வேறு மாநில பிரதிநிகளைக் கொண்ட 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழு செப்டம்பா் மாதம் அமைக்கப்பட்டது.
  7. தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அலுவலராக, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றார்.
  8. ஐசிசி அக்டோபர் மாத சிறந்த வீரராக பாகிஸ்தான் வீரர் நோமன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  9. ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் வெற்றி பெற்றார்.
  10. நடப்பு டென்னிஸ் காலண்டரை, உலகின் நம்பா் 1 வீரராக இத்தாலியின் யானிக் சின்னரும், நம்பா் 1 வீராங்கனையாக பெலாரஸின் அரினா சபலென்காவும், இதற்கான கௌரவக் கோப்பை வழங்கப்பட்டது.
  11. நியூஸிலாந்து நாட்டு பிரதமா் – கிறிஸ்டோஃபா் லக்ஸன்.
  12. அஜர்பைஜான் தலைநகரான பக்கு நகரில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு நவம்பர் 11 தொடங்கி நடைபெற்று வருகிறது.
  13. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டை அஜர்பைஜான் நடத்துவதற்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these