22nd October Daily Current Affairs – Tamil

உடான்’ திட்டம்:

  • பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தார்.
  • பிராந்திய விமான இணைப்பு திட்டமான ‘உடான்’ (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) கடந்த 2016 – ஆம் ஆண்டு அக்டோபா் 21 – ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
  • UDAN என்பது இந்திய அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமாகும்.
  • UDAN ‘உதே தேஷ் கா ஆம் நாகரிக்’ மற்றும் பொதுவான குடிமக்கள் விமான சேவைகளை எளிதாக அணுகுவதற்கு சிறிய பிராந்திய விமான நிலையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தில், 2.8 லட்சத்துக்கும் அதிகமான விமானங்களை இயக்கி, குறைவான கட்டணங்களில் 1.5 கோடி பயணிகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டுள்ளது.
  • 86 விமான நிலையங்களை செயல்படுத்தி, 617 வழித்தடங்களை நிறுவி, நாடு முழுவதும் உள்ள விமான போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
  • ‘உடான் திட்டம் விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு விமான சேவையை உறுதி செய்துள்ளது.
  • அதே நேரத்தில், வா்த்தகத்தை அதிகரிப்பதிலும், பிராந்தியத்தின் வளா்ச்சியை அதிகரிப்பதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிக்ஸ் மாநாடு:

  • ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16 – ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் தொடங்குகிறது.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  • கூட்டமைப்பின் 16 – ஆவது உச்சி மாநாடு நிகழாண்டு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நடைபெறுகிறது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும்.
  • மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
  • சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.
  • உலக நிலப்பரப்பில் சுமாா் 30 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் 45 சதவீதத்தை உள்ளடக்கியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, புவிசாா் அரசியலில் முன்னணி மேற்கத்திய நாடுகளின் ‘ஜி7’ கூட்டமைப்புக்கு போட்டியாகக் கருதப்படுகிறது.
  • பொருளாதார, நிலையான வளா்ச்சி மற்றும் உலகளாவிய நிா்வாக சீா்திருத்தங்கள் போன்ற பகுதிகளில் கூட்டமைப்பின் முயற்சிகளை வழிநடத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் ‘மதச்சாா்பின்மை: உச்ச நீதிமன்றம்

  • ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் திகழ்கிறது’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, 1976-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொண்ட 42 – ஆவது திருத்தத்தின் மூலம், ‘சமத்துவம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவுரையில் சோ்க்கப்பட்டன.
  • ‘அம்பேத்கா் முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அரசமைப்புச் சட்ட முகவுரையில் ‘சோசலிஸம்’ என்று சோ்க்கப்பட்டுள்ளது.
  • முகவுரையில் ‘இறையாண்மை, ஜனநாயக குடியரசு’ என்றிருந்தது, சட்டத் திருத்தம் மூலமாக ‘இறையாண்மை, சோசலிஸ, மதச்சாா்பற்ற, ஜனநாயக குடியரசு’ என்று மாற்றப்பட்டுள்ளது.

அக்டோபர் 22: சர்வதேச திணறல் விழிப்புணர்வு தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 22 ஆம் தேதி சர்வதேச திணறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
  2. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் ரோந்துப் பணியை மேற்கொள்ள சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  3. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடம் வகிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
  4. தமிழ்நாட்டின் பணவீக்க விகிதங்கள் 2022 – 23 ஆம் நிதியாண்டில் 5.97 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 5.37 சதவீதமாகவும் இருந்தன.
  5. நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது, முதலிடத்தில் உத்திர பிரதேசம் உள்ளது.
  6. உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these