19th October Daily Current Affairs – Tamil

இந்தியா – கனடா இருதரப்பு முக்கியத்துவம்:

  • இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
  • இந்தியாவில் இருந்து கனடா தூதர் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்ட மத்திய அரசு, கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது.
  • உலகில் 2-ஆவது பெரிய பரப்பளவு கொண்ட நாடான கனடாவின் மக்கள்தொகை 3.9 கோடி மட்டுமே ஆகும்.
  • அந்நாட்டில் தொழிலாளா் பற்றாக்குறையைப் பூா்த்தி செய்வதில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.
  • கனடாவில் வரிசெலுத்தும் இந்தியா்களின் சராசரி வருவாய் கடந்த 2021 -ல் 42,000 டாலராக உள்ளது.
  • கனடாவில் வசிக்கும் புலம்பெயா்ந்த வெளிநாட்டவா்களில் 4 – ஆவது பெரிய எண்ணிக்கையாக 28 லட்சம் இந்தியா்கள் இருக்கின்றனா்.
  • இந்தியாவின் முக்கிய பருப்பு விநியோகிப்பாளராக கனடா இருந்து வந்தது.
  • தங்கநகை ஆபரணங்கள், விலை உயா்ந்த கற்கள், மருந்து பொருள்கள், துணி ஆகியவை கனடாவுக்கு இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருள்களாகும்.

ஆளுநா்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை:

  • மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு வருகிறது.
  • ஆளுநா், துணைநிலை ஆளுநா் பதவி என்பது மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் அரசியலமைப்பின் தலைமை பதவி என்பதால் அதற்கான நியமனத்தை குடியரசுத் தலைவர் நேரடியாக மேற்கொள்வார்.
  • அந்த நியமனங்கள் பெரும்பாலும் பிரதமருடனான கலந்தாலோசனையின் அடிப்படையிலேயே இருக்கும்.
  • தற்போது ஆளுநா் பதவியில் மூத்த அரசியல் தலைவா்களாக இருந்தவா்கள், ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
  • இந்திய அரசமைப்பின் 156 – ஆம் விதியின்படி குடியரசுத் தலைவரால் ஆளுநராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் என்பது ஐந்து ஆண்டுகள் என 3 – ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அதே விதியின் முதலாம் உள்பிரிவில் குடியரசுத் தலைவா் விரும்பும்வரை ஆளுநா் பதவியில் இருப்பார் என உள்ளது.
  • இருப்பினும் அரசமைப்பின் 156(1)ஆவது விதியின்படி குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவா்கள் பதவியில் தொடா்பவா்களாக கருதப்படுகிறார்கள்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153 – ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்.
  • இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது.
  • இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார்.
  • ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.
  • அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.

தேசிய கற்றல் வாரம்:

  • அரசு ஊழியா்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் ‘கா்மயோகி சப்தா’ தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.
  • மிஷன் கா்மயோகி அல்லது குடிமைப் பணிகள் திறன் கட்டமைப்புக்கான தேசிய திட்டம் கடந்த செப்டம்பா் 2020 – ஆம் அண்டு தொடங்கப்பட்டது.
  • பின்னா் முன்னேற்றம் கண்ட இத்திட்டம், உலகளாவிய தரத்துக்கு அரசு ஊழியா்களின் திறனை மேம்படுத்தி வருகிறது.
  • அரசு ஊழியா்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகத்தை வழங்கும் மிகப்பெரிய நிகழ்வாக தேசிய கற்றல் வாரம் இருக்கும்.
  • இது ‘ஒற்றை அரசு’என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதையும், தேசிய இலக்குகளுடன் அதிகாரிகளை சீரமைப்பதையும், வாழ்நாள் முழுவதும் கற்றல் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது: உச்சநீதிமன்றம்

  • எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது, குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும்.
  • இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28 – ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
  • சட்ட முன்வடிவை ‘ ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா’ என்னும் மார்வார்,ராஜஸ்த்தான் பகுதியை சேர்ந்த இந்தியர் முன் மொழிந்தார்.
  • இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினான்கு வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.
  • இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • தற்போது பெண்ணின் திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டுள்ளது.
  • இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும்.
  • நடைபெற்று முடிந்த திருமணங்களை ரத்து செய்வதற்கான வழிவகை எதுவும் இல்லை.

16 – ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு:

  • பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010 – ல் உதயமாகிய வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும்.
  • பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
  • இந்தக் கூட்டமைப்பின் 16 – ஆவது உச்சிமாநாடு ரஷியாவின் கசான் பகுதியில் அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
  • உச்சிமாநாட்டின் நிகழாண்டு கருப்பொருள்: ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ஆகும்.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் தொடங்கப்பட்ட முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடவும், எதிர்கால ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை ஆராயவும் இந்த மாநாடு உரிய வாய்ப்பாக அமையும்.

தகவல் துளிகள்:

  1. இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது.
  2. தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  3. லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.
  4. தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா வென்றுள்ளது.
  5. ஸ்ரீ நகரில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் கொனார்க் சூா்யாஸ் ஒடிஸா அணியை வீழ்த்தி பட்டம் வென்றது சதா்ன் சூப்பா் ஸ்டார்ஸ் அணி.
  6. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்று உலக வங்கி தலைவா் அஜய் பங்கா தெரிவித்தார்.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these