7th October Daily Current Affairs – Tamil

ஐ.நா ஒரு  பழைய நிறுவனம்:

  • தில்லியில் நடைபெற்ற கெளடில்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர், சமகால பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் செயல்பட முடியாத ஐ.நா ஒரு பழைய நிறுவனம் போன்றது என தெரிவித்தார்.
  • ஐக்கிய நாடுகள் சபை என்பது சர்வதேச அமைதி மற்றும்பாதுகாப்பை பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், சர்வதேச ஒத்துழைப்பை அடைதல் மற்றும் உறுப்பு நாடுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படும் அரசியல் சர்வதேச அமைப்பாகும்.
  • சான் பிரான்சிஸ்கோ மாநாடு முடிந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 – ஆம் தேதி தொடங்கியது, அந்த நாள் ஐநா தினம் என கொண்டாடப்படுகிறது.
  • இது உலகின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • ஐ.நா வின் தலைமையகம் நியூ யார்க் நகரத்தில் உள்ளது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, எதிர்கால உலகப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா நிறுவப்பட்டது.
  • ஐ.நா சபையில் இந்தியாவின் தற்போதைய பிரதிநிதி டிஎஸ் திரிமூர்த்தி ஆவார்.

சர்வதேச சோலார் அலையன்ஸ் (ஐஎஸ்ஏ):

  • சர்வதேச சோலார் அலையன்ஸ் (ஐஎஸ்ஏ) என்பது 120 – க்கும் மேற்பட்ட கையொப்பமிட்ட நாடுகளின் கூட்டணியாகும்.
  • பெரும்பாலானவை சூரிய ஒளி நாடுகளாகும், இவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ட்ராபிக் ஆஃப் கேன்சர் மற்றும் மகர டிராபிக் இடையே உள்ளது.
  • புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சூரிய சக்தியின் திறமையான நுகர்வுக்கு வேலை செய்வதே கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.
  • ISA தலைமையகம் இந்தியாவின் ஹரியானாவில் உள்ளது.

 இந்திய – மத்திய கிழக்கு – ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பு:

  • இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC), ஆசியாவையும், ஐரோப்பாவையும் மத்திய கிழக்கு மற்றும் மத்தியத் தரைக்கடல் வழியாக இணைக்கும் பொருளாதார வழித்தடம் ஆகும்.
  • இத்திட்டத்தை 2023- ல் முதன்முதலில் இந்தியா முன்மொழிந்தது.
  • புது தில்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், இரயில், சாலை வழியாக இணைக்கும் 6,000 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பொருளாதார வழித்தடத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கையெழுத்திட்டது.

அக்டோபர் 7: உலக பருத்தி தினம்

  • உலகளவில் பருத்தியின் முக்கியத்துவத்தை அறியும் வாய்ப்பை வழங்குவதற்காக உலகளவில் அக்டோபர் 7 – ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

உலக வாழ்விட தினம்: (அக்டோபர் முதல் திங்கள்)

  • உலக வாழ்விட தினம் உலகம் முழுவதும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
  • இது டிசம்பர் 1985 – இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. இந்தியாவிலேயே முதல் முறையாக உலக கவிஞா்கள் மாநாடு மதுரையில் நவம்பா் மாதம் 21 – ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  2. மாலத்தீவு நாட்டு அதிபா் முகமது மூயிஸ் ஆவார்.
  3. கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் 1971 – லும், சென்னை அணுமின் நிலையம் 1970 – லும் அமைக்கப்பட்டது.
  4. கலைஞா் நூற்றாண்டு பூங்கா சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகே திறக்கப்பட உள்ளது.
  5. சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை, 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்த நிலையில், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
  6. கரீபியன் கடற்பகுதியில் உருவான ஹெலீன் என்று பெயரிடப்பட்ட புயல், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது.
  7. சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சாம்பியன் ஆனார்.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these