4th October Daily Current Affairs – Tamil

மராத்தி, பாலி உள்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து:

  • காங்கிரஸ் ஆட்சியின் போது கடந்த 2004 – ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • அதன்பின், 2014 – ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • இதன்மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.
  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது, இதில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • சிறப்பு மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
  • இதன்மூலம் செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரிப்பு: அமெரிக்க ஆணையம்

  • இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்து வருகிறது; மதச் சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளது’ என்று சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் ஆணையத்தின் (யுஎஸ்சிஐஆா்எஃப்) வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • மேலும், மதச் சுதந்திர மீறல்கள் அடிப்படையில் கவலைக்குரிய நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் ஆணையத்தின் அறிக்கையை கடுமையாக விமா்சித்து, நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு சா்வதேச அங்கீகாரம்:

  • மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, சா்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறை ஃபோரமில் இணைப்பு உறுப்பினராகியுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஐ.எம்.டி.ஆா்.எஃப். என்கிற சா்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறை குழு என்பது சா்வதேச அளவில் உள்ள மருத்துவ சாதனக் கட்டுப்பாட்டாளா்களுக்கான தன்னார்வக் குழுவாகும்.
  • மருத்துவ சாதனங்களுக்கான உலகளாவிய ஒத்திசைவு, ஒழுங்குமுறை, விரைவான ஒழுங்கிணைப்பு போன்ற வலுவான அடித்தளப் பணிகளை உருவாக்க இந்த பணிக்குழு ஒன்றிணைந்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு ஆதரவுடன் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 11 நாடுகளில் உள்ள மருத்துவ சாதன ஒழுங்குமுறை அல்லது கட்டுப்பாட்டு அமைப்புகளால் கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவில் கூடி ஏற்படுத்தப்பட்டது.
  • இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை இணைப்பு உறுப்பினராக சோ்க்க ஒப்புதல் வழங்கியது.
  • ஐ.எம்.டி.ஆா்.எஃப் என்கிற சா்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறை ஃபோரமில் இந்தியா இணைப்பு உறுப்பினராக இணைந்துள்ளது.

எண்ணெய் வித்துகள் இயக்கம்:

  • தேசிய சமையல் எண்ணெய்-எண்ணெய் வித்துகள் இயக்கத்தை அடுத்த 7 ஆண்டுகளில் ரூ 10,103 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புக்கொண்டது.
  • உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் சமையல் எண்ணெயில் தன்னிறைவு இலக்கை அடைதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளையில் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

ரூ1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்:

  • மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து மத்திய நிதியுதவித் திட்டங்களையும் ஒன்றிணைத்து 2 புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரதமரின் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவை அடைய கிருஷோன்னதி திட்டம் ஆகிய இரு புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • மாநில அரசுகள் மூலம் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், தங்களின் தேவைகளுக்கேற்ப நிதியைப் பயன்படுத்தி கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

3 அக்டோபர்: நவராத்திரி

  • நவராத்திரி என்பது துர்கா தேவியை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவாகும்.
  • இது சைத்ரா நவராத்திரி மற்றும் ஷரத் நவராத்திரி என அழைக்கப்படும், வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும்.
  • 2024 -,ஆம் ஆண்டில், ஷரத் நவராத்திரி அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது.

தகவல் துளிகள்:

  1. கடந்த 2004 – ஆம் ஆண்டில் முதலாவதாக தமிழ் மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்கப்பட்டது.
  2. சம்ஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகளுக்கு ‘செம்மொழி’அந்தஸ்து வழங்கப்பட்டது.
  3. தற்போது செம்மொழிப் பட்டியலில் இணையவிருக்கும் 5 மொழிகள், மகாராஷ்டிரம் (மராத்தி), பிகார்-உத்தர பிரதேசம்-மத்திய பிரதேசம் (பாலி மற்றும் பிராகிருதம்), மேற்கு வங்கம் (வங்கமொழி), அஸ்ஸாம் (அஸ்ஸாமி) ஆகிய மாநிலங்களில் பிரதானமாக பேசப்படுபவை.
  4. சென்னை மெட்ரோ 2 – ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ 63,236 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  5. வெப்பமண்டல பவளப் பாறைகளைக் கொண்ட டியாகோ காா்சியா தீவை உள்ளிடக்கிய சாகோஸ் தீவுக்கூட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மோரீஷஸிடம் ஒப்படைக்க பிரிட்டன்  ஒப்பந்தம் அளித்தது.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these