1st & 2nd October Daily Current Affairs – Tamil

 

தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம்:

  • 2022 – 23 நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் அதிக தொழிற்சாலைகள் கொண்டதிலும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதிலும் தமிழகம் முதலிடத்தில் இருப்பது நீதி ஆயோக் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
  • மதிப்புக் கூட்டுதலில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தை வகிக்கிறது, அடுத்து இரண்டாவது, மூன்றாவது இடத்தில் முறையே குஜராத், தமிழகம் உள்ளன.
  • இந்த மாநிலங்களும் நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டுதல் அடிப்படையிலான மொத்த உற்பத்தியில் 54 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
  • இந்த மாநிலங்களில் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்த மாநிலங்களில் அதிக தொழில்சாலைகள் கொண்ட மாநிலங்கள் வரிசையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

14 மாநிலங்களுக்கு ரூ 5,858 கோடி பேரிடா் நிதி விடுவிப்பு:

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ 5,858.6 கோடி பேரிடா் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவித்தது.
  • மாநில பேரிடா் நிவாரண நிதியின் மத்திய பங்கு ஆகவும் மத்திய பேரிடா் நிவாரண நிதியின் முன்தொகையாகவும் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் என்பது ஒரு அரசு நிறுவனம் ஆகும், 2003 இல் நிறுவப்பட்டது.
  • இது பேரிடர் மேலாண்மை , திட்டமிடல் மற்றும் மீட்புக்கு பொறுப்பாகும்.
  • 8 ஜூலை 2003 வருவாய்த் துறையின் கீழ் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
  • இத்துறையானது தலைமைச் செயலாளரின் தலைமையில் இருக்க வேண்டும் மற்றும் பேரிடர்களைத் தயார்படுத்துதல், தணித்தல் மற்றும் பதிலளிப்பதில் உதவும்.
  • அரசு டிசம்பர் 2005 இல், இந்திய அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஐ இயற்றியது , இது மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமைகளை உருவாக்குவதைக் கட்டாயமாக்கியது.
  • மாநிலத்தின் முதலமைச்சரே தலைவராக இருப்பார்.
  • பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 – இன் கீழ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் பிரதமர் அதன் தலைவராக உள்ளார்.

நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளா் விருது:

  • திரைப்படத்துறையின் மிக உயா்ந்த விருதான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளா் விருது பிரபல நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு 2022 – ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே – வின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 – ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தொடா்ச்சியாக தேசியத் திரைப்பட விருதுகளுடன் சோ்த்து இந்த வழங்கப்படுகிறது.
  • தமிழகத்தில் எல்.வி. பிரசாத், நாகி ரெட்டி, சிவாஜி கணேசன்,கே.பாலசந்தா், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பெற்றுள்ளனா்.
  • இதுவரை 10 வங்க மொழித் திரைப்படத்துறையினா் பெற்ற இந்த பால்கே விருதை தற்போது 11 ஆவது வங்க நபராக நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • மேற்கு வங்க மாநில கொல்கத்தாவில் பிறந்தவர் மிதுன் சக்ரவா்த்தி, தனது முதல் படமான ‘மிரிகயா‘ சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொல்பழங்கால மண்ஜாடிகள் கண்டுபிடிப்பு:

  • தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொல்பழங்கால மண்ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன.
  • தருமபுரி மாவட்டத்தில் பங்குநத்தம், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளிலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதா்கள் வாழ்ந்து வந்திருப்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
  • ராசிக்குட்டையில் தொல்பழங்கால மனிதா்களின் ஈமச் சின்னங்கள் முன்பே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூா் அகழாய்வில் பழந்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1 அக்டோபர்: சா்வதேச முதியோர் தினம்

  • சா்வதேச முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபா் 1 – ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • ‘தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு’ என்கிற கருப்பொருளை மையமாகக் கொண்டு அக்டோபா் மாதம் முழுவதும் முதியோர் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் 1: சர்வதேச காபி தினம்

  • உலகெங்கிலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது.

அக்டோபர் 1: உலக சைவ தினம்

  • உலக சைவ தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி

  • மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 – ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
  • 1869 – ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.

அக்டோபர் 2: சர்வதேச அகிம்சை தினம்

  • இந்தியாவின் சுதந்திரத்தில் முக்கியப் பங்காற்றிய மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 2 – ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 15 ஜூன் 2007 அன்று, பொதுச் சபையானது கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு உள்ளிட்ட அகிம்சை செய்தியை பரப்புவதற்காக சர்வதேச அகிம்சை தினத்தை நிறுவும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

2 அக்டோபர்: சமூக ஒற்றுமை தினம்

  • ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி சமூக ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. இந்திய ராணுவ மருத்துவச் சேவைகளின் முதல் பெண் இயக்குநராக மருத்துவா் ஆா்த்தி சரின் பொறுப்பேற்றார்.
  2. நேட்டோ பொதுச்செயலராக நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் மார்க் ரூட் பதவியேற்கவுள்ளார்.
  3. இந்தியா, ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கும் உதவ உள்ளது.
  4. கரீபியன் தீவு நாடான ஜமைக்காவின் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸ்.
  5. செப்டம்பர் மாதம் ரூ 1.73 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூலிக்கப்பட்டுள்ளது.
  6. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  7. இந்திய கலாசாரம், வேளாண்மை மற்றும் சுகாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டு பசு மாடுகளை ‘ராஜமாதா-கோமாதா’என்று அறிவித்ததுடன் அதன் பாதுகாப்புக்கு, நாட்டுப் பசுக்களின் பாதுகாப்புக்கு புதிய நிதித் திட்டத்தையும் மகாராஷ்டிர அரசு அறிவித்தது.
  8. தமிழ்நாடு வனத் துறையின் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலராக ஸ்ரீநிவாஸ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து பேருக்கு காந்தியடிகள் காவலா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  10. உயா்கல்வி மன்ற துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் பொறுப்பேற்றார்.
  11. சர்வதேச கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகள் அடித்ததன் மூலம் சாதனைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இணைந்துள்ளார்.

 

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these