வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை:
- விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
- வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கண்டறியப்பட்டன.
- வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டது.
- வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் எனறழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது.
- சூதுபவள மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் கிடைக்கின்றன.
முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம்:
- பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு சென்னையில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது.
- அப்போது, ஆராய்ச்சி மாணவா்களின் திறன்களை மேம்படுத்த, முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- இதற்காக மாநில அளவில் தகுதித் தோ்வு நடத்தப்பட்டு மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.
- ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புத் திறன்களைக் கொண்டிருக்கும் மாணவா்களை அடையாளம் காண ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக தோ்வு நடத்தப்பட்டது.
- தங்களது ஆராய்ச்சிப் படிப்பை அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடர மாதம் ரூ 25,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
- மூன்று ஆண்டுகளுக்கு அளிக்கப்படும் இந்த ஊக்கத் தொகைக்காக ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
33 – வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்:
- தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.
- தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்னைகளை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை பேசி தீர்த்து வருகின்றன.
- இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 32 முறை கூடியுள்ள நிலையில், இன்று 33-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறுகிறது.
- மத்திய மற்றும் மாநில தீர்ப்பாயங்களின் தலைவர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டம் 1956, பிரிவு 6 A-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 1, 2018 அன்று, ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ அமைத்தது.
- இந்த காவிரி நதிநீர் ஆணையமானது ஓர் தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளரைக் கொண்டதாகும்.
ஆகஸ்ட் 23: அடிமை வர்த்தகம் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 அன்று அடிமை வர்த்தகம் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 23: இஸ்ரோ தினம்
- ஆகஸ்ட் 23 ஆம் தேதி இஸ்ரோ தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
- சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா் ரவி அகா்வால்.
- தென்-மத்திய ஆப்பிரிக்க நாடான பாட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல ஹனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது, இதற்கு ‘ஒன்றிணைப்பு சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- போலந்து நாட்டின் பிரதமா் டொனால்டு டஸ்க்.
- ஆண்டின் சிறந்த சா்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய கேப்டன் ரோஹித் சா்மா பெற்றார்.
- பயிற்சியாளா் ராகுல் திராவிடுக்கு ‘வாழ்நாள் சாதனையாளா்’ விருது வழங்கப்பட்டது.
- போலந்து நாட்டின் அதிபா் ஆண்ட்ரே டுடாவ்.
- இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் சுற்றுலா வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ 400 கோடியில் புதிய உற்பத்தி ஆலையை டாபா் இந்தியா நிறுவனம் அமைக்க உள்ளது.
- உக்ரைன் நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.
- விவசாயிகளின் அனைத்து குறைகளுக்கும் சுமுகமாகத் தீா்வு காணும் வகையில் குழு விரைவில் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
- மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஆராய அமைக்கப்பட்ட குழு நீதிபதி ஹேமா குழு.
- இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 5 – 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி எட்டப்படும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒடிஸாவின் பல்வேறு மாவட்டங்களில் தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.