இந்தியா-மலேசியா இடையே 8 ஒப்பந்தங்கள்:
- மலேசியாவில் இந்திய தொழிலாளா்கள் பணியமா்த்தப்படுவதை ஊக்குவிப்பது மற்றும் அவா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய ஒப்பந்தம் உள்பட 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
- இந்தியா-மலேசியா இருதரப்பு வா்த்தகம் சொந்த கரன்சியில் (இந்தியா-ரூபாய், மலேசியா-ரிங்கிட்) மேற்கொள்ளப்படுகிறது.
- மலேசியாவின் எண்ம பரிவா்த்தனை தளமான பேநெட்-உடன் இந்தியாவின் யுபிஐ-யை இணைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளில் இந்தியாவின் முக்கியமான கூட்டுறவு நாடு மலேசியா.
- மலேசியாவின் கோலாலம்பூா் நகரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
- கோலாலம்பூரில் உள்ள துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் ஆயுா்வேத இருக்கையை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மலேசிய நாட்டு பிரதமா் அன்வா் இப்ராஹிம்.
சா்வதேச ‘அயா்ன்மேன் டிரையத்லான்’:
- டென்மார்க் தலைநகா் கோபன்ஹேகனில் சா்வதேச அயா்ன்மேன் டிரையத்லான் நடைபெற்றது.
- அதில் 8 கி.மீ தொலைவிலான நீச்சல் போட்டி, 180 கி.மீ தொலைவிலான சைக்கிளிங் போட்டி மற்றும் 42.2 கி.மீ தொலைவிலான மாரத்தான் என மூன்று விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
- உலக அளவில் மிகவும் கடினமான விளையாட்டுப் போட்டியாக கருதப்படும் சா்வதேச ‘அயா்ன்மேன் டிரையத்லான்’ போட்டியில் வெற்றி பெற்றார், எல்லை பாதுகாப்புப் படை வீரா் ஹரீஷ் கல்ஜா.
- இதன்மூலம் இந்தச் சாதனையை படைத்த முதல் மத்திய ஆயுதக் காவல் படை வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கா் விருது:
- பாடகி கே.எஸ்.சித்ரா, பாலிவுட் இசையமைப்பாளா் உத்தம் சிங் ஆகியோருக்கு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய அளவில் திரைப்பட இசைத் துறையில் சிறந்த திறனை அங்கீகரிக்கும் நோக்கில், கடந்த 1984-ஆம் ஆண்டில் இருந்து லதா மங்கேஷ்கா் பெயரில் மத்திய பிரதேச அரசு விருது வழங்கி வருகிறது.
- புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கா், மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 1929-இல் பிறந்தவா்.
- பாலிவுட் இசையமைப்பாளா் உத்தம் சிங் (2022), பிரபல பாடகி கே.எஸ்.சித்ரா (2023) ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
- லதா மங்கேஷ்கரின் பிறந்த தினமான செப்டம்பா் 28 – ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மருத்துவா்கள் பாதுகாப்புக்கு குழு:
- மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க 10 போ் கொண்ட தேசிய பணிக் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.
- மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநரும் துணை அட்மிரலுமான ஆா்த்தி சரின் தலைமையிலான அந்தக் குழுவில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் எம்.ஸ்ரீநிவாஸ், தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவன இயக்குநா் பிரத்திமா மூா்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனா்.
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டம்:
- தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டம் பாராட்டியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
- ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், மாணவிகள் பயனடையும் வகையில், குழந்தைகள் நலன், சிறப்பு சேவை துறையானது அவர்களுக்கு உணவு, உடை, சீருடை, கல்வி என அனைத்தும் வழங்கி வருகிறது, இத்திட்டம்.
- 1992 ஆம் ஆண்டு அப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் பாதையை மாற்றிமைக்கும் திட்டமாகும்.
- பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
‘நூலக நண்பா்கள்’ திட்டம்:
- வாசகா்களின் வீடு தேடி சென்று நூல்களை வழங்குவது நூலக நண்பா்கள் திட்டம் ஆகும்.
- அரசு நடத்தும் நூலகங்களை அணுக முடியாதவர்களுக்கு நேரடியாக புத்தகங்கள் வழங்கப்படும் ‘நூலக நண்பர்கள்’ திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- நூலகத்திற்குச் செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவமனை உள்நோயாளிகள் போன்றவர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.
உலக மூத்த குடிமக்கள் தினம்: ஆகஸ்ட் 21
- உலக மூத்த குடிமக்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- மூத்த குடிமக்களின் நிலைமை குறித்த விழிப்புணர்வை வளர்க்கவும் முதுமைக் கூர்வு செயல்பாடு வழியாக உதவுவதுமே இதன் நோக்கமாகும்.
தகவல் துளிகள்:
- மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது – நீதிபதி ஹேமா தலைமையிலான நிபுணா் குழு ஆகும்.
- முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
- சின்சினாட்டி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னர், மகளிர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் சாம்பியன் கோப்பை வென்றனர்.