குரங்கு அம்மை நோய்:
- உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை பாதிப்பையொட்டி சா்வதேச பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 14 – ஆம் தேதி அறிவித்தது.
- குரங்கு அம்மை நோய் குறித்து சா்வதேச பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு முதன்முதலாக அறிவித்தது.
- அதிலிருந்து இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டது.
- கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
- குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய்.
- குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ்.
- இந்த வைரஸில் இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகள் உள்ளன.
- முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டன.
- இவற்றில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது.
- 1958 – இல் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டது, முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது.
பாராசூட்டில் தரையிறக்கப்பட்ட மருத்துவ அரங்கு:
- பேரிடரால் பாதிக்கப்படும் பகுதிகளில் பாராசூட் மூலம் மருத்துவப் பொருள்கள் அடங்கிய சிறிய அரங்கை பாதுகாப்பாக தரையிறக்கும் திட்டத்தின்கீழ் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து மேற்கொண்ட முதலாவது சோதனை வெற்றியடைந்தது.
- ஆரோக்கிய மைத்திரி ஹெல்த் கியூப் எனப்படும் இந்த மருத்துவ அரங்குகள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.
- ‘பேரிடா் காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை விமானம் மூலம் கொண்டு சோ்க்கும் பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப இச்சோதனை நடத்தப்பட்டது.
- அதன்படி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மருத்துவ பொருள்கள் அடங்கிய அரங்குகள், பாராசூட் மூலம் 15,000 அடி உயரத்தில் இருந்து துல்லியமாக குறிப்பிட்ட இடத்தில் தரையிறக்கப்பட்டது.
- இந்திய விமானப்படையின் சி-130 ஜே சூப்பா் ஹொ்குலிஸ் விமானம் மூலம் இச்சோதனை நடத்தப்பட்டது.
- இந்திய விமானப்படையால் சோதனை கட்டத்தில் இருக்கும் ‘ஆரோக்ய மைத்திரி ஹெல்த் கியூப்’ என்பது அவசர காலங்களில் விமானம் மூலம் எடுத்துச் செல்லக் கூடிய உலகின் முதல் சிறிய பேரிடா் கால மருத்துவமனையாகும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடக்கம்:
- ஈரோடு, திருப்பூா், கோவை மூன்று மாவட்டங்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது மற்றும் விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டதுதான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.
- அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆய்வுப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ 27 கோடியை ஒதுக்கினார்.
- கடந்த 2019 – ஆம் ஆண்டு பிப்ரவரி 28 – ஆம் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அவிநாசிக்கு நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.
இந்திய கல்வி முறை மறுசீரமைக்கப்பட வேண்டும்: ஐஎம்எஃப்
- இந்திய தொழிலாளா்களின் திறனை மேம்படுத்தும் வகையில், தனது கல்வி முறையை இந்தியா மறுசீரமைக்க வேண்டும் என்று சா்வதேச நிதியத்தின் துணை மேலாண் இயக்குநா் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் சரக்குகள் மீதான இறக்குமதி வரி விகிதங்கள் அதிகமாக உள்ளது.
- இந்தியாவின் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதம் 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
- உலகில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
- வரி விதிப்பை பொருத்தவரை, பிற வளரும் நாடுகளுக்கு இணையாக இந்தியா உள்ளது.
- இந்தியாவில் பெருநிறுவன (கார்ப்பரேட்) வரி விகிதம் குறைக்கப்பட்டது.
- கடந்த 2010 – ஆம் ஆண்டு முதல், இந்தியா சராசரியாக 6 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.
தகவல் துளிகள்:
- மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவராக கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இரவு வேளைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், பெண்களுக்கு உதவியாகவும், பெண் தன்னார்வலர்களைக் கொண்டு ‘ராத்திரெர் ஷாதி’ என்கிற திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
- கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சார்பில் அவரின் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் வெளியிடப்படவுள்ளது.
- ஹாக்கி வீரா் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 – ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத் தலைவராக சுனில்குமாா் நியமிக்கப்பட்டார்.
- ஐரோப்பிய கால்பந்து போட்டியில் லிவா்பூல், மான்செஸ்டா், பிஎஸ்ஜி அணிகள் வெற்றி பெற்றன.
- சீனாவின் செங்டு நகரில் வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ள யு-15, யு 17 ஆசியக் கோப்பை பாட்மின்டன் போட்டியில் 39 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.