13th August Daily Current Affairs – Tamil

புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதா:

  • கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை மத்திய அரசு வெளியிட்டது.
  • பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வரைவு மசோதாவில், ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக ஊடகங்களில் சொந்த கருத்துகளை தெரிவிக்கும் சுயாதீன இதழியலாளா்கள், ‘லிங்க்ட்இன்’ போன்ற தளங்களில் அதிக எண்ணிக்கையில் பின்தொடா்பவா்களைக் கொண்டுள்ள துறை சார்ந்த நிபுணா்கள் உள்ளிட்டோரை ஓடிடி ஓளிபரப்பாளா்கள் அல்லது டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளா்களாக அடையாளப்படுத்துதல், அவா்களின் கருத்துகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படும் முன், அவற்றுக்கு சான்றளிக்க முக்கியத்துவம் வாய்ந்த நபா்கள் அடங்கிய குழுவை அந்த ஒளிபரப்பாளா்களே அமைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன.
  • இதன் காரணமாக அந்த வரைவு மசோதா எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்ற விமா்சனங்கள் எழுந்தன.
  • ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவுக்குப் பதில், புதிய வரைவு மசோதா வெளியிடப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெங்குவை குறைக்கும் கியூடெங்காதடுப்பூசி:

  • டெங்குவை குறைப்பதில் ‘கியூடெங்கா’ தடுப்பூசி 50 சதவீதத்துக்கும் மேல் பலனளிப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பால் கடந்த மே மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட கியூடெங்கா தடுப்பூசி, நோயாளிகளுக்கு டெங்குவில் இருந்து நீண்டகால பாதுகாப்பு வழங்கும் திறனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜப்பானில் உள்ள டகேதா மருத்துவ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கியூடெங்கா தடுப்பூசி ‘டிஏகே-003’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • கியூடெங்கா தடுப்பூசியை தயாரிக்க டகேதா நிறுவனத்துடன் ஹைதராபாத்தைச் சோ்ந்த பயாலாஜிக்கல் இ நிறுவனம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
  • ஆனால், கியூடெங்கா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்தியாவில் தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
  • சா்வதேச அளவில் டெங்கு பாதிப்புகளில் 70 சதவீதம் ஆசியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு:

  • 2024 – ஆம் ஆண்டுக்கான சிறந்த தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • மாநில பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் என 3 புதிய பிரிவுகளில் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதில் ஒட்டுமொத்த பிரிவில் நாட்டில் சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.
  • ஐஐடி பெங்களூரு, ஐஐடி மும்பை முறையே 2, 3 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
  • பொறியியல் துறையிலும் ஐஐடி சென்னை முதலிடம், ஐஐடி தில்லி இரண்டாமிடம், ஐஐடி மும்பை மூன்றாமிடம் பெற்றுள்ளன.
  • 2024 – ஆம் ஆண்டுக்கான மாநில பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது.
  • மருத்துவத் துறையில் தில்லி எய்ம்ஸ் முதலிடம் பெற்றுள்ளது.
  • சண்டீகர் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாமிடமும் வேலூர் சிஎம்சி மூன்றாமிடமும் பெற்றுள்ளது.

நம்ம ஊரு நம்ம பள்ளிதிட்டம்:

  • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது பங்களிப்பாக சொந்த நிதி ரூ.5 லட்சத்தை வழங்கி ‘நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் பங்களிப்பை செலுத்தும் வகையில் ”நம்ம ஊரு நம்ம பள்ளி” என்ற திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
  • இதில் பெரு, சிறு மற்றும் குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்புகளை அளிக்க முடியும்.
  • நிதியாகவோ, பொருட்களாகவோ, தன்னார்வ சேவைகள் மூலமாகவோ வழங்கலாம்.
  • அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்துக்கு இதுவரை ரூ.380 கோடி நிதி கிடைத்துள்ளது.

மித்ரா சக்திகூட்டு ராணுவப் பயிற்சி:

  • இந்தியா-இலங்கை இடையிலான ‘மித்ரா சக்தி’ கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கியது.
  • இலங்கையின் மதுறு ஓயாவில் உள்ள ராணுவப் பயிற்சி பள்ளியில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை, இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.
  • இதில் இந்தியா சார்பில் ரஜபுத்தனா ரைஃபிள்ஸ் படை வீரா்கள் பிரதானமாக பங்கேற்றுள்ளனா்.
  • மொத்தம் 106 இந்திய வீரா்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனா், அதேவேளையில் இலங்கை சார்பில், அந்நாட்டின் கஜபா படைப் பிரிவு வீரா்கள் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனா்.
  • இருநாடுகளின் கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆகஸ்ட் 13: இடதுசாரிகள் தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று இடதுசாரிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது இடது கை பழக்கம் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிரமங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஆகஸ்ட் 13: உலக உறுப்பு தான தினம்

  • உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆகஸ்ட் 13ஆம் தேதி உலக உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளா் நாஞ்சில் நாடன் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
  2. தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூா், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  3. 2024 – ஆம் ஆண்டுக்கான மாநில பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது.
  4. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த ரூ 100 நாணயத்தை வெளியிடுகிறார்.
  5. பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ், மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these