3 நாடுகள் சுற்றுப்பயணம்: குடியரசுத் தலைவர்
- ஃபிஜி, நியூசிலாந்து மற்றும் டிமோர்-லெஸ்டே ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்தார் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
- டிமோர்-லெஸ்டே நாட்டுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடா்பாக அந்த நாட்டு அதிபா் ராமோஸ்-ஹோர்டாவை சந்தித்து குடியரசுத் தலைவா் ஆலோசனை நடத்தினார்.
- டிமோர்-லெஸ்டே நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் காலா் ஆஃப் டிமோர்-லெஸ்டே ’ என்ற விருது திரௌபதி முா்முக்கு வழங்கப்பட்டது.
- ஃபிஜி நாட்டுக்குச் சென்றிருந்த அவா் அந்நாட்டு அதிபா் வில்லியம் கேடோனிவிர் மற்றும் பிரதமா் சிட்டிவேனி ரபூகா ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
- குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கு ஃபிஜி நாட்டின் உயரிய விருதான ‘ஆா்டா் ஆஃப் ஃபிஜி’ வழங்கப்பட்டது.
- நியூஸிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட திரௌபதி முா்மு அந்த நாட்டு கவா்னா் ஜெனரல் டோம் சிண்டி கிரோ, பிரதமா் லக்சன் மற்றும் துணைப் பிரதமா் வின்ஸ்டன் பீட்டா்ஸ் ஆகியோரை சந்தித்தார்.
- ஆக்லாந்தில் இந்திய தூதரகம் அமைக்கப்படவுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு: அமெரிக்கா முதலிடம்
- பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது.
- போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற நாடு அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன, பிரான்ஸ் 5-ஆம் இடம் பிடித்தது.
- இதில் இந்தியாவுக்கு 71-ஆவது இடம் கிடைத்தது.
- ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
- டோக்கியோவில் கடந்த 2021-இல் 32-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.
- பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி, 17 நாள்கள் நடைபெற்றது.
- முதல் பதக்க விளையாட்டாக துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணி பிரிவு நடைபெற்றது.
- போட்டியின் இறுதி நாளில் கடைசியாக நடைபெற்ற மகளிர் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா, பிரான்ஸை வீழ்த்தி தங்கம் வென்றது.
- ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடக்க நிகழ்ச்சியின்போது அணிகளின் அணிவகுப்பு, பாரீஸ் நகரில் பாயும் சென் நதியில் படகுகளில் நடத்தப்பட்டது.
- ஈஃபிள் கோபுரத்தின் பழை இரும்புச் சில்லுகள் பதக்கங்களில் பதித்து வழங்கப்பட்டன.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடனேயே நிறைவு செய்துள்ளது.
- 2020 – டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்றது.
- நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார், ஒலிம்பிக் தடகளத்தில் தொடா்ந்து 2 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமை பெற்றார்.
- துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கா், தனிநபா் பிரிவிலும், கலப்பு அணி பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும் என 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தினார்.
- ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மனு பாக்கா், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா்.
- ஆடவா் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
“நீங்கள் உங்கள் சொந்த ராஜா” திட்டம்:
- நீங்கள் உங்கள் சொந்த ராஜா” திட்டம் தமிழ்நாட்டில் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்தல், திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- டிசம்பர் 01, 2023 அன்று அமைச்சர் உதயநிதி தலைமையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டது.
- அழிந்து போகும் அபாயத்தில் உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
- கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை அந்தந்த கைவினைகளில் தொழில்முனைவோராக ஆக்க ஊக்குவிக்கிறது.
- மரவேலை, தஞ்சாவூர் பொம்மைகள் மற்றும் ஓவியம், பனை ஓலை கலை, கடல் ஓடு கலை, களிமண் மற்றும் காகித கலை, மட்பாண்டங்கள், கைத்தறி சாயமிடுதல், பத்தமடை பாய் தயாரித்தல் மற்றும் பல உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கிறது.
- பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆர்டர்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது, பொருளாதார சுதந்திரம் மற்றும் நிலைத்தன்மையை வளர்க்கிறது.
ஆகஸ்ட் 12: உலக யானைகள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட்12: சர்வதேச இளையோர் தினம்
- மோதல்களை தடுத்தல் மற்றும் அவற்றை உருமாற்றுதல், அனைவரையும் உள்ளடக்கல், சமூக நீதி, நீடித்த அமைதி ஆகியவற்றிற்கு இளையோர்கள் ஆற்றிய பங்கை கௌரவிக்கும் விதமாக சர்வதேச இளையோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 1999 – ஆம் ஆண்டில், ஐ.நா. பொதுச் சபையினால் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச இளையோர் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- இந்திய நிதியதவியுடன் மாலத்தீவின் அட்டு சாலைகள் மற்றும் வடிகால் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த திட்டத்துக்கு ரூ.560 கோடியை இந்தியா வழங்கியுள்ளது.
- மாலத்தீவின் அட்டு நகர கடற்கரை மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதிக்கான வங்கியின் நிதியுதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள மாற்று இணைப்பு நான்கு வழிச் சாலை ஆகியவற்றின் தொடக்க விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றார்.
- வங்கதேச உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையத் ரெஃபாத் பதவியேற்றார்.
- குத்துச்சண்டையில் மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் தைவானின் லின் யு டிங், போலந்தின் ஜூலியா செரெமெடாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.