11th August Daily Current Affairs – Tamil

காவல்கிணறு இஸ்ரோவில் ககன்யான் என்ஜின் சோதனை :

  • திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு இஸ்ரோவில், விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட்டில் பொருத்தக் கூடிய கிரையோஜெனிக் என்ஜின் சோதனை செய்யப்பட்டது.
  • மத்திய அரசின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்து வருகிறது.
  • ககன்யான் (Gaganyaan விண்கலம்) விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது ஜி. எஸ். எல். வி மார்க் III மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
  • இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டமானது டிசம்பர் 18,2014 இல் நடைபெற்றது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்:

  • வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எனப்படும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டமானது, உலக வங்கி துணையுடன், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில், ஊரக நிறுவன மேம்பாடு, நிதியுதவியை அணுகும் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் வழியாக ஊரக சமூகங்களை நிலையாக மேம்படுத்தி, அதனால், செல்வவளத்தைப் பெருக்குவதன் மூலம், வறுமை ஒழிப்பையும் தாண்டிய மேம்படுத்தப்பட்ட நுட்பங்களைப் (வழிமுறைகள்) பயன்படுத்தி, ஊரகப்பகுதிகளின் மாற்றத்தை ஏற்படுத்துவதை முதன்மைத் தொலைநோக்காகக் கொண்டு செயல்படும் ஒரு புதுமையான திட்டம்.
  • பெண்களை மையப்படுத்திய நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்க்கையில் நிலையான வருமானத்தை பெறவும், வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றியைமக்கவும் முடியும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது.

எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டம்:

  • அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • 2025 – ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும்.
  • கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (level based) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதையே எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

விடியல் பயணத் திட்டம்:

  • விடியல் பயணத் திட்டத்தின்படி, 2021-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதாகும்.
  • பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டத்தின் பெயரை ‘விடியல் பயணம்’ எனப் பெயர் மாற்றம் செய்தார் தமிழக முதல்வர்.

ஆகஸ்ட் 11: மகள்களுக்கான தேசிய தினம்

  • மகள்கள் பிறக்கின்றதை சிறப்பிக்கும் விதமாக மகள்களுக்கான சர்வதேச தினம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. பருவநிலையைத் தாங்கி வளா்வதோடு, அதிக மகசூல் தரக் கூடிய 109 புதிய பயிர் ரகங்களை பிரதமா் மோடி அறிமுகம் செய்யவுள்ளார்.
  2. மாலத்தீவில் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை (யுபிஐ) சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  3. மாலத்தீவின் 28 தீவுகளில் இந்திய நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குடிநீா் விநியோகம் மற்றும் கழிவுநீா் வடிகால் வசதி பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ்.
  4. மேகாலயத்தில் 2025-ஆம் ஆண்டு முதல், பத்தாம் வகுப்புக்கு இரு பொதுத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளது.
  5. டிமோ்-லெஸ்டே நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் காலா் ஆஃப் திமோர்-லெஸ்தே ’ என்ற விருதை குடியரசுத் தலைவா் முா்முக்கு டிமோ்-லெஸ்டே அதிபா் ராமோஸ்-ஹோர்டா வழங்கினார்.
  6. டிமோ்-லெஸ்டே நாட்டின் பிரதமா் சனானா குஸ்மாவோ.
  7. 2030 – ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடனான எத்தனால் கலப்பை 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  8. மத்திய அமைச்சரவை செயலராக உள்ள ராஜீவ் கெளபாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், மத்திய அமைச்சரவை செயலராக டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
  10. வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான கூம்பு வடிவ, நீள்வட்ட வடிவ 2 சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டன.
  11. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவா், மகளிர் என இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் நாடு என்ற சிறப்பை நெதா்லாந்து பெற்றுள்ளது.
  12. கோவளத்தில் நடைபெற்ற தேசிய சா்ஃபிங் போட்டியில் தமிழகத்தின் கமலி மூா்த்தி, கா்நாடகத்தின் ரமேஷ் புடியல் சாம்பியன் பட்டம் வென்றனா்.
  13. பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஆடவா் மல்யுத்தத்தில் இந்திய வீரா் அமன் செஹ்ராவத் வெண்கலம் வென்றா.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these