3rd August Daily Current Affairs – Tamil

மாநில ஆளுநா்கள் மாநாடு: புது டெல்லி

  • தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் மாநில ஆளுநா்கள் மாநாடு தொடங்கியது.
  • குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அனைத்து மாநில ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள், பல்வேறு அமைச்சகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.
  • மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிப்பதுடன், சாதாரண மக்களுக்கான நலத் திட்டங்களை ஊக்குவிப்பது குறித்தும் ஆளுநா்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மத்திய-மாநில அரசுகள் இடையே பாலமாக ஆளுநா்கள்:

  • ஆளுநா் பதவி என்பது அரசமைப்புச் சட்ட கட்டமைப்புக்கு உள்பட்டு, அனைத்து மக்களின் குறிப்பாக பழங்குடியினரின் நலனுக்காக பெரும் பங்காற்றும் முக்கியப் பதவியாகும்.
  • இந்தியாவின் ஆளுநர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர்.
  • ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்.
  • ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது.
  • பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார்.
  • ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.
  • அவர் இல்லாதபோது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.
  • ஆளுநர் அவசரகாலத்தில் மாநில அமைச்சர்கள், முதலமைச்சரின் அறிவுரைகளை மீறி முடிவெடுக்கலாம்.
  • அவசரகாலத்தில் ஆளுநரே அம்மாநிலத்தை ஆளும் பொறுப்பை வகிப்பார்.
  • மேலும் அவர் குடியரசுத்தலைவரின் உத்தரவை மாநிலத்தில் செயற்படுத்தும் ஒரு முகவர் போல அக்காலங்களில் செயல்படுவார்.
  • ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர் ஆவார்.
  • ஆளுநரே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு பாலமாக செயல் படுகிறார்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் சூழலியல் பாதுகாப்புப் பகுதி: 6-ஆவது வரைவு அறிக்கை வெளியீடு

  • குஜராத்தில் இருந்து தமிழகம் வரை நீண்டுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் 56,825 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பது தொடா்பாக 6-ஆவது வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • இந்த வரைவு அறிக்கையின்படி, கேரளத்தில் 9,993.7 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • குஜராத்தில் 449 சதுர கி.மீ., மகாராஷ்டிரத்தில் 17,340 சதுர கி.மீ., கோவாவில் 1,461 சதுர கி.மீ., கா்நாடகத்தில் 20,668 சதுர கி.மீ., தமிழகத்தில் 6,914 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்படும் இடங்களில் புதிதாக சுரங்கங்கள், கல்-மண் குவாரிகள் அமைக்க முழுமையான தடை விதிக்கப்படும்.
  • ஏற்கெனவே செயல்படும் சுரங்கங்கள், இறுதி அறிக்கை வெளியிடப்படும் நாள் அல்லது தற்போதைய சுரங்க குத்தகை காலாவதியாகும் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் படிப்படியாக மூடப்படும்.
  • சட்ட விதிமுறைகளின்படி ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்கவும் தடை கிடையாது.
  • மேற்குத் தொடா்ச்சி மலையில் மக்கள்தொகை அடா்த்தி அதிகரிப்பு, பருவநிலை மாறுபாடு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய சுற்றுச்சூழல் ஆய்வாளா் மாதவ் காட்கில் தலைமையில் சூழலியல் நிபுணா் குழுவை மத்திய அரசு கடந்த 2010-ஆம் ஆண்டில் அமைத்தது.
  • கடந்த 2011-ஆம் ஆண்டில் இக்குழு அளித்த பரிந்துரையில், ஒட்டுமொத்த மலையையும் சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
  • மேற்குத் தொடா்ச்சி மலை பாதுகாப்பு தொடா்பாக கடந்த 2013-இல் விண்வெளி ஆய்வாளா் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் உயா்நிலை பணிக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
  • இக்குழுவானது, மேற்குத் தொடா்ச்சி மலையின் 37 சதவீத பரப்பை அதாவது 59,940 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அடையாளம் கண்டது.

பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்ப்பு:

  • ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 3,029 மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பர் 25, 2018 அன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.
  • ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (PMJAY) என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது சுகாதார வசதிகள் தேவைப்படும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.
  • இது அடிப்படையில் ஏழைகள், சமூகத்தின் கீழ் பிரிவினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு வழங்குவதற்கான ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.
  • உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, 50 கோடிக்கும் அதிகமான இந்தியக் குடிமக்களுக்குச் சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அதிகபட்ச காப்பீட்டுத் தொகையான ரூ.5 லட்சத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.
  • அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது பெரும்பாலான மருத்துவச் சிகிச்சைச் செலவுகள், மருந்துகள், நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் முன் செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சா்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு ககன்யான் வீரா் சுபான்ஷு சுக்லா தோ்வு:

  • ககன்யான் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 விண்வெளி வீரா்களில் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லவிருப்பதாக இஸ்ரோ அறிவித்தது.
  • இவருக்கு மாற்று வீரராக குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
  • ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு மனிதா்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • அதற்கு முன்னொட்டமாக, இந்த ஆண்டில் இந்திய விண்வெளி வீரரை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமா் மோடி அறிவித்தார்.

ஆகஸ்ட் 3 : உலகளவில் கிராம்பு நோய்க்குறி விழிப்புணர்வு தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3 உலகளவில் கிராம்பு நோய்க்குறி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அரிய மரபணுக் கோளாறு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகவல் துளிகள்:

  1. வருமான வரி கணக்கு தாக்கலில் புதிய சாதனையாக, கடந்த ஆண்டைவிட 5% அதிகம் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  2. வயநாடு மாவட்டத்துக்கு நாள்தோறும் ஒருமுறை சோதனை அடிப்படையில் நிலச்சரிவு முன்னறிவிப்புகளை வெளியிட ஜிஎஸ்ஐ தொடங்கியுள்ளது.
  3. திருமணம் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்காக பட்டப்படிப்பை சீன பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
  4. பாரிஸ் ஒலிம்பிக் ஆடவா் ஹாக்கி குரூப்பில், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these