மாநில ஆளுநா்கள் மாநாடு: புது டெல்லி
- தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் மாநில ஆளுநா்கள் மாநாடு தொடங்கியது.
- குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அனைத்து மாநில ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள், பல்வேறு அமைச்சகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.
- மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிப்பதுடன், சாதாரண மக்களுக்கான நலத் திட்டங்களை ஊக்குவிப்பது குறித்தும் ஆளுநா்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
மத்திய-மாநில அரசுகள் இடையே பாலமாக ஆளுநா்கள்:
- ஆளுநா் பதவி என்பது அரசமைப்புச் சட்ட கட்டமைப்புக்கு உள்பட்டு, அனைத்து மக்களின் குறிப்பாக பழங்குடியினரின் நலனுக்காக பெரும் பங்காற்றும் முக்கியப் பதவியாகும்.
- இந்தியாவின் ஆளுநர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர்.
- ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
- இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்.
- ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது.
- பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார்.
- ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.
- அவர் இல்லாதபோது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.
- ஆளுநர் அவசரகாலத்தில் மாநில அமைச்சர்கள், முதலமைச்சரின் அறிவுரைகளை மீறி முடிவெடுக்கலாம்.
- அவசரகாலத்தில் ஆளுநரே அம்மாநிலத்தை ஆளும் பொறுப்பை வகிப்பார்.
- மேலும் அவர் குடியரசுத்தலைவரின் உத்தரவை மாநிலத்தில் செயற்படுத்தும் ஒரு முகவர் போல அக்காலங்களில் செயல்படுவார்.
- ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர் ஆவார்.
- ஆளுநரே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு பாலமாக செயல் படுகிறார்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் சூழலியல் பாதுகாப்புப் பகுதி: 6-ஆவது வரைவு அறிக்கை வெளியீடு
- குஜராத்தில் இருந்து தமிழகம் வரை நீண்டுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் 56,825 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பது தொடா்பாக 6-ஆவது வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- இந்த வரைவு அறிக்கையின்படி, கேரளத்தில் 9,993.7 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
- குஜராத்தில் 449 சதுர கி.மீ., மகாராஷ்டிரத்தில் 17,340 சதுர கி.மீ., கோவாவில் 1,461 சதுர கி.மீ., கா்நாடகத்தில் 20,668 சதுர கி.மீ., தமிழகத்தில் 6,914 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
- சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்படும் இடங்களில் புதிதாக சுரங்கங்கள், கல்-மண் குவாரிகள் அமைக்க முழுமையான தடை விதிக்கப்படும்.
- ஏற்கெனவே செயல்படும் சுரங்கங்கள், இறுதி அறிக்கை வெளியிடப்படும் நாள் அல்லது தற்போதைய சுரங்க குத்தகை காலாவதியாகும் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் படிப்படியாக மூடப்படும்.
- சட்ட விதிமுறைகளின்படி ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்கவும் தடை கிடையாது.
- மேற்குத் தொடா்ச்சி மலையில் மக்கள்தொகை அடா்த்தி அதிகரிப்பு, பருவநிலை மாறுபாடு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய சுற்றுச்சூழல் ஆய்வாளா் மாதவ் காட்கில் தலைமையில் சூழலியல் நிபுணா் குழுவை மத்திய அரசு கடந்த 2010-ஆம் ஆண்டில் அமைத்தது.
- கடந்த 2011-ஆம் ஆண்டில் இக்குழு அளித்த பரிந்துரையில், ஒட்டுமொத்த மலையையும் சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
- மேற்குத் தொடா்ச்சி மலை பாதுகாப்பு தொடா்பாக கடந்த 2013-இல் விண்வெளி ஆய்வாளா் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் உயா்நிலை பணிக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
- இக்குழுவானது, மேற்குத் தொடா்ச்சி மலையின் 37 சதவீத பரப்பை அதாவது 59,940 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அடையாளம் கண்டது.
பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்ப்பு:
- ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 3,029 மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பர் 25, 2018 அன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.
- ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (PMJAY) என்றும் அழைக்கப்படுகிறது.
- இது சுகாதார வசதிகள் தேவைப்படும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.
- இது அடிப்படையில் ஏழைகள், சமூகத்தின் கீழ் பிரிவினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு வழங்குவதற்கான ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.
- உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, 50 கோடிக்கும் அதிகமான இந்தியக் குடிமக்களுக்குச் சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது அதிகபட்ச காப்பீட்டுத் தொகையான ரூ.5 லட்சத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.
- அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது பெரும்பாலான மருத்துவச் சிகிச்சைச் செலவுகள், மருந்துகள், நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் முன் செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சா்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு ககன்யான் வீரா் சுபான்ஷு சுக்லா தோ்வு:
- ககன்யான் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 விண்வெளி வீரா்களில் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லவிருப்பதாக இஸ்ரோ அறிவித்தது.
- இவருக்கு மாற்று வீரராக குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
- ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு மனிதா்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- அதற்கு முன்னொட்டமாக, இந்த ஆண்டில் இந்திய விண்வெளி வீரரை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமா் மோடி அறிவித்தார்.
ஆகஸ்ட் 3 : உலகளவில் கிராம்பு நோய்க்குறி விழிப்புணர்வு தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3 உலகளவில் கிராம்பு நோய்க்குறி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அரிய மரபணுக் கோளாறு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகவல் துளிகள்:
- வருமான வரி கணக்கு தாக்கலில் புதிய சாதனையாக, கடந்த ஆண்டைவிட 5% அதிகம் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- வயநாடு மாவட்டத்துக்கு நாள்தோறும் ஒருமுறை சோதனை அடிப்படையில் நிலச்சரிவு முன்னறிவிப்புகளை வெளியிட ஜிஎஸ்ஐ தொடங்கியுள்ளது.
- திருமணம் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்காக பட்டப்படிப்பை சீன பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
- பாரிஸ் ஒலிம்பிக் ஆடவா் ஹாக்கி குரூப்பில், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.