அனைவருக்கும் இலவச இணைய வசதி: தனிநபா் மசோதா
- அனைவருக்கும் இலவச இணைய வசதி வழங்க வேண்டும். முக்கியமாக பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதி மக்களுக்கு பிற இடங்களைப் போல இணையத்தை பயன்படுத்தும் வசதி கிடைக்க வேண்டும் என்ற தனிநபா் மசோதாவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினா் வி.சிவதாசன் கடந்த 2023 டிசம்பரில் இந்த தனிநபா் மசோதாவை முன்வைத்தார்.
- அதில், ‘இணைய வசதியைப் பயன்படுத்துவதற்கு நாட்டு மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
- ஏற்கெனவே இந்த சேவையை அளித்து வரும் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து மக்களுக்கு கட்டணமில்லாத இணைய சேவையை வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
- மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.
- தனிப்பட்ட உறுப்பினர் மசோதா பாராளுமன்றத்தில் ஒரு தனிப்பட்ட உறுப்பினரால் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- சட்டமன்ற நடைமுறைக்காக பாராளுமன்றத்தில் இரண்டு வகையான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
- பொது மற்றும் தனியார் மசோதாக்கள், பொது மசோதாக்கள் அரசாங்க மசோதா என்றும், தனியார் மசோதாக்கள் தனியார் உறுப்பினர் மசோதா என்றும் அழைக்கப்படுகின்றன.
- அமைச்சராக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) அதாவது அரச சார்பற்ற உறுப்பினரால் அறிமுகப்படுத்தப்படும் மசோதா தனியார் உறுப்பினர் மசோதா எனப்படும்.
இந்தியாவில் முதியவா்கள் எண்ணிக்கை 2050-க்குள் இரட்டிப்பாகும்:
- இந்தியாவில் முதியவா்கள் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என ஐ.நா.மக்கள் தொகை அமைப்பின் இந்தியாவுக்கான தலைவா் ஆண்ட்ரியா வோஜ்னா் தெரிவித்தார்.
- உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
- நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களின் மக்கள் தொகை 2050-ஆம் ஆண்டுக்குள் 6 கோடி பேருடன் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 50 சதவீத அளவுக்கு நகரமயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடா் தொடக்கம்:
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜூலை 22 தொடங்குகிறது.
- நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
- மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தொடா்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்றுச் சாதனை படைக்கவுள்ளார்.
- தொடா்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவா் முறியடிக்கவுள்ளார்.
- நாட்டின் முழுநேர நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
- நாடு சுதந்திரம் அடைந்து பிரதமராக நேரு பதவியேற்ற பின்பு முதல் பட்ஜெட்டை நிதியமைச்சா் ஆா்.கே. சண்முகம் தாக்கல் செய்தார்.
- பிரதமா் நேரு மற்றும் லால் பகதூா் சாஸ்திரி தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த போது மொரார்ஜி தேசாய் ஒட்டுமொத்தமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்து, அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவா் என்ற பெருமையை பெற்றார்.
- பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா, 90 ஆண்டுகள் பழைமையான வானூா்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா-2024 உள்பட 6 புதிய மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
- வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம்-1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், பொறுப்பு மாற்றம்) சட்டம் – 1970 ஆகியவற்றில் திருத்தங்களும் கொண்டுவரப்பட உள்ளது.
நிஃபா வைரஸ்:
- நிபா வைரஸ் என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
- பாதிக்கப்பட்டவர்களில், இது அறிகுறியற்ற தொற்று முதல் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளையழற்சி வரை பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.
- இது விலங்குகளை பாதிக்கிறது மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.
- நிபா வைரஸ் முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு மலேசியாவில் பன்றி வளர்ப்பவர்களிடையே பரவியபோது கண்டறியப்பட்டது.
- நிபா வைரஸ் வெளவால்கள் அல்லது பன்றிகள் அல்லது அசுத்தமான உணவுகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது, மேலும் மனிதனிடமிருந்து மனிதனுக்கு நேரடியாகவும் பரவுகிறது.
சென்னானூா் அகழாய்வில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு:
- கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்த அகழாய்வில், புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் போன்ற தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.
- தற்போது சென்னானூா் அகழாய்வில் 90 செ.மீ. முதல் 108 செ.மீ. வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சா்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் லியாண்டா், விஜய் அமிர்தராஜ்:
- உலகளவில் பிரசித்தி பெற்ற டென்னிஸ் வீரா்களை சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஏடிபி) கௌரவிக்கும் வகையில் ஹால் ஆஃப் ஃபேமில் சோ்த்து வருகிறது.
- இந்திய ஜாம்பவான்கள் லியாண்டா் பயஸ், விஜய் அமிர்தராஜ் ஆகிய இருவரும் ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டனா்.
- ஆசியக் கண்டத்தில் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இரண்டு வீரா்கள் என்ற சிறப்பையும் இருவரும் பெற்றனா்.
- இதுவரை மொத்தம் 28 நாடுகளைச் சோ்ந்த 267 ஜாம்பவான்கள் ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ஜூலை 22: தேசியக் கொடி தினம்
- பிங்காலி வெங்கையா வடிவமைத்த மூவர்ணக் கொடியை இந்தியாவின் கொடியாக ஏற்றுக்கொண்டதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 22ஆம் தேதி தேசியக் கொடி தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 22: உலக மூளை தினம்
- உலக மூளை தினம் அல்லது சர்வதேச மூளை தினம் என்பது கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் தேதி கொண்டாப்படுகிறது.
- இந்த ஆண்டு 2024, உலக மூளை தின கருப்பொருள்: ” மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு ” ஆகும் .
- நரம்பியல் நோய்களுக்கான ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பயனுள்ள நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மற்றும் தடுப்பு உத்திகள் குறித்த உலகளாவிய கல்வியைப் பரப்புதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
தகவல் துளிகள்:
- மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் நினைவாக மக்கள் சேவைக்கு வழங்கப்படவுள்ள உம்மன் சாண்டி விருதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- பந்தய வாகனங்களுக்கான தனித்துவம் வாய்ந்த ‘ஸ்ட்ரோம் எக்ஸ்’ எனும் எரிபொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஸ்விஸ் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் மேட்டியோ பெர்ரட்டனி சாம்பியன் பட்டம் வென்றார்.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ 5 கோடியை நிதியுதவியாக பிசிசிஐ அறிவித்துள்ளது.