முதல்முறையாக வெளிநாட்டில் ‘மக்கள் மருந்தகம்’:
- இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை (ஜன் ஔஷதி கேந்திரா) மோரீஷஸில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
- இந்தியா-மோரீஷஸ் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புக்கு குறிப்பாக முக்கியமான சுகாதாரத் துறை ஒத்துழைப்புக்கு எடுத்துகாட்டாக மக்கள் மருந்தகம் அந்நாட்டில் திறக்கப்பட்டிருக்கிறது.
- மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்த ‘மத்திய அரசின் மக்கள் மருந்தகம்’ கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன.
- இந்திய நிதியுதவி மருத்துவமனை திறப்பு:
- மோரீஷஸின் கிராண்ட் போயிஸில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையைப் பிரதமா் ஜகநாத்துடன் இணைந்து அமைச்சா் ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
- மோரீஷஸ் நாட்டு பிரதமா் பிரவிந்த் குமார் ஜகநாத்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், கோடீஸ்வா் சிங் பதவியேற்பு:
- உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோர் பதவியேற்றனா். இதையடுத்து, உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை 34 நீதிபதிகள் எட்டியது.
- சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கோடீஸ்வா் சிங் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
- அதன்பேரில், இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் நியமித்தார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும்.
- இந்தியா இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28, 1950 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு உருவாக்கப்பட்டது.
- இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசியல் சட்டப்பிரிவு, பிரிவு 5-இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும் கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது.
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147-இன் கீழ் எழுதப்பட்டுள்ளன.
- மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32 –ஆவது கூட்டம்:
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32 -ஆவது கூட்டம் ஜூலை 24 ஆம் தேதி கூட்டப்பட உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.
- காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆா்.சி) ஜூலை 12 – ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதிவரை தமிழகத்திற்கு நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீரை காவிரியில் பிலுகுண்டுலுவில் விடுவிக்க பரிந்துரைத்தது.
- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்காக மத்திய அரசானது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை (Cauvery Water Management Authority -CMA) அமைத்துள்ளது.
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டம், 1956, பிரிவு 6A-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 1, 2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்தது.
- இந்த காவிரி நதிநீர் ஆணையமானது ஓர் தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளரைக் கொண்டதாகும்.
ஐரோப்பிய யூனியன் அமைப்பு:
- ஐரோப்பிய யூனியனின் நிர்வாகப் பிரிவான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உா்சுலா வோண்டொ் லெயென் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
- ஐரோப்பிய யூனியன் அமைப்பு 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட அமைப்பாகும்.
- 1992 – ல் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது, இது மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது.
- பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன.
தகவல் துளிகள்:
- வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- கொமரோஸ் நாட்டைச் சோ்ந்த எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் துகம் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் மூழ்கியது, இது ‘இந்தியாவின் ஐஎன்எஸ் டெக் போர்க் கப்பலால் மீட்கப்பட்டது.
- என்ஐஏ சிறப்பு வழக்குரைஞராக பி.என்.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உா்சுலா வோண்டொ் லெயென் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
- ஆடவா் கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபாவின் சா்வதேச தரவரிசையில், ஆா்ஜென்டீனா முதலிடத்தை உறுதி செய்துகொண்டது. ஸ்பெயின் 3-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
- தென் அமெரிக்க கண்டத்தில் 16-ஆவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது ஆா்ஜென்டீனா.