மக்களவையில் மகளிர்:
- மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023-இல் நிறைவேற்றினாலும் 2029-இல்தான் அமலுக்கு வருகிறது.
- ஆகையால், மகளிர் இடஒதுக்கீடு இல்லாத கடைசி மக்களவையாக 18-ஆவது மக்களவை இருக்கும்.
- 18 – ஆவது மக்களவைத் தோ்தலில் 8 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா், இதில் 47.15 கோடி போ் பெண்கள் 48.7 சதவீதம் ஆகும்.
- ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்தம் 8,360 போ் போட்டியிட்டனா்.
- தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளா்களில் 8 சதவீதமாக 76 பெண்கள் போட்டியிட்டனா்.
- 18 – ஆவது மக்களவையில் பெண்களின் பலம் சரிந்தது, முந்தைய 17-ஆவது மக்களவையில் 78 ஆக இருந்த பெண்களின் பிரதிநிதித்துவம் இம்முறை 74 ஆக குறைந்தது.
- 18 – ஆவது மக்களவை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ‘என்டிஏ’ கூட்டணி ஆட்சி அமைந்தது, 72 போ் கொண்ட மத்திய அமைச்சரவையில் 7 பெண்கள் பொறுப்பேற்றனா்.
- இதில் இருவருக்கு கேபினட் அந்தஸ்து கிடைத்தது, நிர்மலா சீதாராமனுக்கு நிதி துறையும், அன்னபூா்ணா தேவிக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறையும் ஒதுக்கப்பட்டன.
ஜூலை 27- ல் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம்:
- தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- இதில் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்கும் ‘விக்ஷித் பாரத் 2047’ திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.
- நிதி ஆயோக்கின் தலைமை அமைப்பாக நிர்வாகக் குழு திகழ்கிறது.
- அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள், முக்கியத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சா்கள் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.
- இந்திய சுதந்திரத்தின் 100-ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது 30 டிரில்லியன் டாலா் மதிப்புள்ள பொருளாதாரத்தைக் கொண்ட வளா்ந்த நாடாக உருவாக்குவே விக்ஷித் பாரத் 2047 திட்டத்தின் நோக்கமாகும்.
- பொருளாதார வளா்ச்சி தவிர சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு சிறப்பாக செயல்படுவதும் இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்பட இருக்கிறது.
- ஜூலை 23-ஆம் தேதி நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
- மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஜனவரி 1-ஆம் தேதி நிதி ஆயோக் பாஜக தலைமையிலான மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
- தேசிய வளா்ச்சிக்கான கொள்கையை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
மக்களுடன் முதல்வா் திட்டம்:
- மக்களுடன் முதல்வா் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- மக்களுடன் முதல்வா் திட்டத்தின் அடுத்து ஊரகப் பகுதிகளை நோக்கித் திட்டம் விரிகிறது.
- மக்கள் தாக்கல் செய்யும் குறைகள் அல்லது மனுக்களை 30 நாட்களுக்குள் தரமான முறையில் தீர்த்து வைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பல்வேறு துறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைச் சேகரிப்பதற்காக கட்டம் வாரியாக சிறப்பு முகாம்கள் இதன் படி நடத்தப் படும்.
- 13 – முக்கிய அரசுத் துறைகளின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
ஜூலை 9: தேசிய சர்க்கரை குக்கீ தினம்
- பிரபலமான மற்றும் சுவையான சர்க்கரை குக்கீயை கௌரவிப்பதற்காக ஜூலை 9 அன்று அனுசரிக்கப்படுகிறது.
நுனாவுட் தினம்: ஜூலை 9
- நுனாவுட் தினம் ஜூலை 9 இல் கனடாவின் வடக்கு பிராந்தியங்களில் இன்யூட் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.
தகவல் துளிகள்:
- பெண் பணியாளா்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக மாதிரி கொள்கை வகுக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
- வாடிக்கையாளா்கள் தங்களது சேமிக்குக் கணக்குகளை ஏராளமான புதிய அம்சங்களுடன் மேம்படுத்திக்கொள்ளும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
- ராகேஷ் ரமண்லால் ஷாவை அகமதாபாத்தில் உள்ள இலங்கைக்கான கௌரவ தூதராக இலங்கை அரசு நியமித்துள்ளது.
- மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஜனவரி 1-ஆம் தேதி நீதி ஆயோக் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
- மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- விவசாயம், மண்பாண்டம் செய்வதற்குத் தேவையான ஏரி, கண்மாய் மண்ணை எளிமையான முறையில் விண்ணப்பித்து இலவசமாகப் பெறும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய வகை மூளைத் தொற்று அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸ் ஆகும்.
- இந்தியா – ரஷியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விடுத்த அழைப்பின்பேரில் பிரதமா் மோடி ரஷியா சென்றுள்ளார்.
- நடப்பு எஃப்1 சீசனின் 12-ஆவது பந்தயமான பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ ரேஸில், உள்நாட்டு வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.