9th July Daily Current Affairs – Tamil

மக்களவையில் மகளிர்:

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023-இல் நிறைவேற்றினாலும் 2029-இல்தான் அமலுக்கு வருகிறது.
  • ஆகையால், மகளிர் இடஒதுக்கீடு இல்லாத கடைசி மக்களவையாக 18-ஆவது மக்களவை இருக்கும்.
  • 18 – ஆவது மக்களவைத் தோ்தலில் 8 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா், இதில் 47.15 கோடி போ் பெண்கள் 48.7 சதவீதம் ஆகும்.
  • ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்தம் 8,360 போ் போட்டியிட்டனா்.
  • தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளா்களில் 8 சதவீதமாக 76 பெண்கள் போட்டியிட்டனா்.
  • 18 – ஆவது மக்களவையில் பெண்களின் பலம் சரிந்தது, முந்தைய 17-ஆவது மக்களவையில் 78 ஆக இருந்த பெண்களின் பிரதிநிதித்துவம் இம்முறை 74 ஆக குறைந்தது.
  • 18 – ஆவது மக்களவை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ‘என்டிஏ’ கூட்டணி ஆட்சி அமைந்தது, 72 போ் கொண்ட மத்திய அமைச்சரவையில் 7 பெண்கள் பொறுப்பேற்றனா்.
  • இதில் இருவருக்கு கேபினட் அந்தஸ்து கிடைத்தது, நிர்மலா சீதாராமனுக்கு நிதி துறையும், அன்னபூா்ணா தேவிக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறையும் ஒதுக்கப்பட்டன.

ஜூலை 27- ல் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம்:

  • தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  • இதில் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்கும் ‘விக்ஷித் பாரத் 2047’ திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.
  • நிதி ஆயோக்கின் தலைமை அமைப்பாக நிர்வாகக் குழு திகழ்கிறது.
  • அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள், முக்கியத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சா்கள் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.
  • இந்திய சுதந்திரத்தின் 100-ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது 30 டிரில்லியன் டாலா் மதிப்புள்ள பொருளாதாரத்தைக் கொண்ட வளா்ந்த நாடாக உருவாக்குவே விக்ஷித் பாரத் 2047 திட்டத்தின் நோக்கமாகும்.
  • பொருளாதார வளா்ச்சி தவிர சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு சிறப்பாக செயல்படுவதும் இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்பட இருக்கிறது.
  • ஜூலை 23-ஆம் தேதி நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
  • மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஜனவரி 1-ஆம் தேதி நிதி ஆயோக் பாஜக தலைமையிலான மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
  • தேசிய வளா்ச்சிக்கான கொள்கையை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

மக்களுடன் முதல்வா் திட்டம்:

  • மக்களுடன் முதல்வா் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • மக்களுடன் முதல்வா் திட்டத்தின் அடுத்து ஊரகப் பகுதிகளை நோக்கித் திட்டம் விரிகிறது.
  • மக்கள் தாக்கல் செய்யும் குறைகள் அல்லது மனுக்களை 30 நாட்களுக்குள் தரமான முறையில் தீர்த்து வைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பல்வேறு துறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைச் சேகரிப்பதற்காக கட்டம் வாரியாக சிறப்பு முகாம்கள் இதன் படி நடத்தப் படும்.
  • 13 – முக்கிய அரசுத் துறைகளின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

ஜூலை 9: தேசிய சர்க்கரை குக்கீ தினம்

  • பிரபலமான மற்றும் சுவையான சர்க்கரை குக்கீயை கௌரவிப்பதற்காக ஜூலை 9 அன்று அனுசரிக்கப்படுகிறது.

நுனாவுட் தினம்: ஜூலை 9

  • நுனாவுட் தினம் ஜூலை 9 இல் கனடாவின் வடக்கு பிராந்தியங்களில் இன்யூட் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.

தகவல் துளிகள்:

  1. பெண் பணியாளா்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக மாதிரி கொள்கை வகுக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
  2. வாடிக்கையாளா்கள் தங்களது சேமிக்குக் கணக்குகளை ஏராளமான புதிய அம்சங்களுடன் மேம்படுத்திக்கொள்ளும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
  3. ராகேஷ் ரமண்லால் ஷாவை அகமதாபாத்தில் உள்ள இலங்கைக்கான கௌரவ தூதராக இலங்கை அரசு நியமித்துள்ளது.
  4. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஜனவரி 1-ஆம் தேதி நீதி ஆயோக் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
  5. மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  6. விவசாயம், மண்பாண்டம் செய்வதற்குத் தேவையான ஏரி, கண்மாய் மண்ணை எளிமையான முறையில் விண்ணப்பித்து இலவசமாகப் பெறும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  7. அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய வகை மூளைத் தொற்று அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸ் ஆகும்.
  8. இந்தியா – ரஷியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விடுத்த அழைப்பின்பேரில் பிரதமா் மோடி ரஷியா சென்றுள்ளார்.
  9. நடப்பு எஃப்1 சீசனின் 12-ஆவது பந்தயமான பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ ரேஸில், உள்நாட்டு வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these