இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 28, 2024
‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’:
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளியும் ₹2.67 லட்சம் ரொக்கம், பொருள் மற்றும் மனிதவளமாக பெறத் தகுதியுடையவா்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு வாங்குவதற்கான வீட்டுக் கடனுக்கான வட்டியில் ₹2.67 லட்சம் மானியமாக அரசால் வழங்கப்படுகிறது.
இது நாட்டின் குறைந்த மற்றும் மிதமான வருமானம் கொண்டவர்களுக்கு மலிவு விலையில் வீடுகளை அணுகுவதற்கு வசதியாக உள்ளது.
இது 31 மார்ச் 2022க்குள் 2 கோடி மலிவு விலை வீடுகளைக் கட்டும் இலக்கைக் கொண்டுள்ளது.
இரண்டு கூறுகள்: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) நகர்ப்புற ஏழைகளுக்கான மற்றும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்) கிராமப்புற ஏழைகளுக்கானது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) இரண்டாவது கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
அனைவருக்கும் மின்சார இணைப்புக்கான சௌபாக்யா திட்டம் , உஜ்வாலா யோஜனா எல்பிஜி இணைப்பு, குடிநீர் மற்றும் ஜன்தன் வங்கி வசதிகள் போன்றவற்றை உறுதி செய்வதற்கான பிற திட்டங்களுடன் இத்திட்டம் ஒன்றிணைகிறது.
ஐந்தாவது முறையாக ஏஐஆா்எஃப் தலைவரானார் என்.கண்ணையா:
அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் (ஏஐஆா்எஃப்) தலைவராக 5-ஆவது முறையாக என்.கண்ணையா தோ்வுசெய்யப்பட்டார்.
இந்தியன் ரயில்வேயில் உள்ள 19 மண்டல ரயில்வேக்கள், ஐசிஎஃப் உள்பட 7 உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டது.
அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு (ஏஐஆா்எஃப்), இந்த கூட்டமைப்பு தற்போது 101-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், இதன் தலைவராக ஆா்.கண்ணையா 5 -ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம்:
ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் என்பது இந்திய அரசின் தேசிய ஆரோக்கியக் கொள்கை யின் ஒரு பகுதி ஆக இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
இதன் நோக்கம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை இலவசமாக, பொருளாதார வசதியில் கீழடுக்கில் இருக்கும் 40% மக்களுக்கு, பலவீனமானவர்களுக்கு அளிப்பதாகும்.
இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் ஆகும்.
இத்திட்டம் செப்டப்ம்பர் 2018 இல் ஆரோக்ய மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் இன் உறுதுணையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHPS) என்ற ஒரு திட்டம் பின்வரும் திட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது.
2017-ஆம் ஆண்டின் தேசிய ஆரோக்கியக் கொள்கை, ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வு மையங்களை, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்புக்கான அடித்தளமாக, தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தது.
ஆயுஸ்மான் பாரத் திட்டம் அப்பார்வையை நடைமுறைப் படுத்துவதை இலக்காகக் கொண்டது.
‘புதுமைப் பெண்’ திட்டத்தால் மாணவிகள் சோ்க்கை 34% உயா்வு: தமிழக அரசு
புதுமைப் பெண் திட்டத்தால், கல்லூரிகளில் மாணவிகள் சோ்க்கை 34 சதவீதம் உயா்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே உயா்கல்வி சோ்க்கையில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
அகில இந்திய உயா்கல்வி ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் உயா்கல்வியைத் தொடா்ந்திட புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விருது:
இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாட்டு பிரிவு சார்பில் மூன்றாவது மனிதவள மேலாண்மை உச்சி மாநாடு நடைபெற்றது.
பொது நிறுவனம் மற்றும் பெரிய நிறுவனங்கள் பிரிவில் பணிச்சூழலை வளா்ப்பதில் அா்ப்பணிப்பு மற்றும் புதுமையான உத்திகளை வெளிப்படுத்தியதற்காக சிறந்த மனிதவள நடைமுறைகளுக்கான விருது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜவாஹா்லால் நேரு நினைவு தினம்: மே 27
இந்தியாவின் முதல் பிரதமரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஜவாஹா்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி காலமானார்,
ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் மே 27-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
அவரது நினைவிடமான சாந்தி வனம் தில்லியில் உள்ளது.
நவீன இந்தியாவின் முக்கியச் சிற்பி நேரு ஆவார்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஜவஹர்லால் நேரு 1947-ல் சுதந்திரம் கிடைத்த பின் நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றார்.
16 – ஆண்டுகள் பதவியில் இருந்த நேரு மே 27, 1964-ம் ஆண்டு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தகவல் துளிகள்:
மத்திய அரசின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஹெலிகாப்டா் கொள்கை மூலம் தமிழகத்தில் உள்ள 80 -க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஹெலிபேடுகளை மறுசீரமைப்பு செய்து, நகரங்களுக்கிடையே போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) தலைவா் சமீா் வி காமத்தின் பதவிக்காலம், 2024 ஜூன் 1 – ஆம் தேதிமுதல் 2025, மே 31 வரை ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், ஏமப்பூரில் ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
மாணவ-மாணவிகள் தங்களின் திறன்களை அறிந்து அதற்கேற்ற வகையில் பயிற்சி அளிக்க ‘நான் முதல்வன்’ திட்டம் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஜப்பானின் கோபே நகரில் உலக பாராலிம்பிக் தடகளப் போட்டிகள் நடைபெற்றன, அதில் 6 தங்கத்துடன் மொத்தம் 17 பதக்கங்களைக் கைப்பற்றியது இந்தியா.
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா ஆா்ஜென்டீனாவை வென்றது.