புதிய சட்டத்தின்படி தோ்தல் ஆணையர்கள் நியமனம்:
- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இடம்பெற்றிருப்பர்.
- தேர்தல் ஆணையர்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நியமனம் செய்து வந்தார்.
- இரு தோ்தல் ஆணையர்களில் பணி மூப்பு பெற்றவர், தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தார்.
- இந்த நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2023 -ஆம் ஆண்டு மார்ச் 2 – ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையா்கள் நியமனம் தொடர்பாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
- பிரதமா் தலைமையிலான தேர்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி, காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பணியிடங்களையும் நிரப்பியது.
- மத்திய அரசு கொண்டுவந்த 2023 புதிய சட்டத்தின் கீழ், முதல் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை கடந்த பிப்ரவரி 17 – ஆம் தேதி மத்திய அரசு நியமித்தது.
ஏப்ரல் 17: உலக ஹீமோபிலியா தினம்
- ஹீமோபிலியா நோய் மற்றும் பிற மரபுவழி இரத்தப்போக்கு கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17 அன்று உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- உச்சநீதிமன்றத்தின் 52 – ஆவது தலைமை நீதிபதியாக மே 14 – ஆம் தேதி பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
- உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா.
- சாலைப் பாதுகாப்பு பிரசாரம் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்றது. ‘மற்றவர்களையும் கவனிங்கள், நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்’ என்கிற கருப்பொருளில் நிகழாண்டு இப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
- நிகழாண்டு எழுத்தாளர் தமிழவன் மற்றும் பன்முகப்படைப்பாளரான ப.திருநாவுக்கரசுக்கும் மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025 வழங்கப்பட்டது.
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 – ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற உள்ளது.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.