14th April Daily Current Affairs – Tamil

ட்ரோன்களை அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு வெற்றிகரமாக சோதனை:

  • ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
  • ஆந்திர மாநிலம் கர்னூலில் லேசர் வழிகாட்டுதலில் செயல்படும் 30 கிலோவாட் திறன்கொண்ட எம்கே-2(ஏ) எரிசக்தி ஆயுத அமைப்பை டிஆர்டிஓ பரிசோதனை செய்தது.
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுத அமைப்பு, தொலைதூரத்தில் இருந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது.
  • அத்துடன் பல ட்ரோன் தாக்குதல்களையும் அந்த ஆயுத அமைப்பு தடுத்து, கண்காணிப்பு சென்சார்களையும் அழித்தது.

இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி:

  • இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து 6 நாள்கள் மேற்கொள்ளும் கடற்படை கூட்டுப் பயிற்சி தன்சானியாவில் தொடங்கியது.
  • அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம் (மகாசாகர்) என்பது பிரதமர் மோடியின் புதிய தொலைநோக்குப் பார்வையாகும்.
  • இந்தத் தொலைநோக்குப் பார்வையின் விரிவான கட்டமைப்பின் கீழ், முதல்முறையாக இந்தியா மற்றும் 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து தன்சானியாவின் தார்-எஸ்-சலாம் கடற்பகுதியில் கடற்படை கூட்டுப் பயிற்சி தொடங்கியது.

ஏப்ரல் 14: உலக குவாண்டம் தினம்.

  • உலக குவாண்டம் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.
  • உலகெங்கிலும் உள்ள குவாண்டம் அறிவியல் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் பற்றிய பொது விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாகக் கொண்டாட்டம்:

  • அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தகவல் துளிகள்:

  1. இந்திய துணை தூதரகம் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவை ஆகியவை இணைந்து இரண்டாம் ஆண்டு கலை இலக்கிய மாநாட்டை இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்தியது.
  2. தமிழல் அமுக்கிரா வடமொழியில் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் மூலிகை மருத்து செடி குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.
  3. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக, மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
  4. இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி.
  5. திருவள்ளூரில் இயற்கை வேளாண் பொருள் கண்காட்சி தொடங்கியது.
  6. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்விம் ஓபன் நீச்சல் போட்டியில் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஆடவர் பிரிவில் ஜெர்மன் வீரர் லுகாஸ் மார்டென்ஸ் புதிய உலக சாதனை படைத்தார்.
  7. அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி வென்றுள்ளது.
  8. இப்போட்டியில் கலப்பு அணிகள் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா-ரிஷப் யாதவ் இணை, சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these