செயற்கை நுண்ணறிவு: 10 – ஆவது இடத்தில் இந்தியா.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரூ 11,900 கோடி தனியார் முதலீட்டுடன் உலகளவில் 10 – ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- ஏஐயில் ரூ 5.7 லட்சம் கோடி தனியார் முதலீட்டுடன் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.
- ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கான தயார்நிலை குறியீட்டில் 170 நாடுகளில் இந்தியா 36 – ஆவது இடத்தில் உள்ளது.
- 2022 – இல் இந்த குறியீட்டில் 48 – ஆவது இடத்தில் இருந்தது.
- தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 99 – ஆவது இடத்திலும், திறன் சார்ந்த வகைப்பாட்டில் 113 – ஆவது இடத்திலும் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் 3 – ஆவது இடத்திலும் , தொழில்துறை திறனில் 10 – ஆவது இடத்திலும், நிதியில் 70 – ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது.
- உலகின் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா மற்றும் சீனாவிடம் அதிக ‘கிளவுட் உள்கட்டமைப்பு’ சேவைகள் உள்ளன.
- நானோ தொழில்நுட்பத்தில் இந்தியாவும், காற்றாலையில் ஜெர்மனியும் மின்சார வாகன துறையில் ஜப்பானும், 5ஜி தொழில்நுட்பத்தில் தென் கொரியாவும் நிபுணத்துவம் பெற்றுள்ளன.
ஐஎன்எஸ் சுனைனா கப்பல்:
- இந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல் ஐஎன்எஸ் சுனைனா கார்வாரில் இருந்து இந்தியப் பெருங்கடல் கப்பல் – சாகர் முன்முயற்சியின் கீழ் பயணிக்க உள்ளது.
- ஒன்பது நட்பு நாடுகளைச் சேர்ந்த 44 கடற்படை வீரர்களைக் கொண்டு பணியில் ஈடுபடும் இந்தக் கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கார்வாரிலிருந்து தொடங்கி வைத்தார்.
- பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, சர்வதேச ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதில் இந்த இயக்கம் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
- ஐஓஎஸ் சாகர் என்பது தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடற்படைகள், கடல்சார் முகமைகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாகும்.
தகவல் துளிகள்:
- இந்திய வம்சாவளி பெண் விஜயலக்ஷ்மி மோகனுக்கு கலாசார பாரம்பரிய விருது வழங்கப்பட்டது.
- பேரிடர் நிவாரண நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ 522.34 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.
- மியான்மருக்கு நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்துள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்துள்ளார்.
- இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஐஓஎஸ் சாகர் என்பது தென்மேற்கு இந்து சமுத்திரப் பகுதியில் உள்ள கடற்படைகள் மற்றும் கடல்சார் முகமைகளை இந்திய கடற்படை மேடையில் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாகும்.
- பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து.