1st April Daily Current Affairs – Tamil

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு:

  • தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளைவிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட தனித்துவத்தோடு உருவாக்கப்படும் சிறப்பு வாய்ந்த, தனித்தன்மைகொண்ட பொருள்களை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசால் இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த வரிசையில் புவிசார் பெற்ற பொருள்களை, எந்த நிலையிலும், வியாபார லாபத்துக்காகவோ, போலியாக வேறு யாரேனுமோ இந்தப் பெயரை பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
  • முதல்முறையாக, விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே, தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடிச் சேலை, காஞ்சிபுரம் பட்டுச்சேலை, மதுரை மல்லிகை, தஞ்சை கலைத்தட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1:ஏப்ரல் முட்டாள்கள் தினம்.

  • ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அனைத்து முட்டாள்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஏப்ரல் 1: ஒடிசா தினம்.

  • இது உத்கல் திவாஸ் என்றும் அழைக்கப்படும். ஒடிசா தினம், ஏப்ரல் 1, 1936 அன்று ஒடிசா மாநிலம் உருவானதைக் குறிக்கிறது.

ஏப்ரல் 1: பார்வையின்மை தடுப்பு வாரம்.

  • பார்வையின்மைக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை இது அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. நீதி ஆயோக் அமைப்பு, தேசிய பொருளியல் ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் (என்சிஏஇஆர்) இணைந்து உருவாக்கியுள்ள மாநில பொருளாதார தகவல் மைய வலைபக்கத்தை மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்யவுள்ளார்.
  2. நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  3. பிரதமா் நரேந்திர மோடியின் தனிச் செயலராக நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
  5. முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these