பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்:
- உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை நம்பியோ வெளியிட்டுள்ளது.
- நம்பியோ 2025 ஆய்வின்படி, அன்டோரா நாடுதான் உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தையும், கத்தார் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
- 7 மதிப்பெண்களுடன் 66 – ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
மார்ச் 27: உலக நாடக அரங்க நாள் (World Theatre Day).
- உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 – ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
- உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 – ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது.
தகவல் துளிகள்:
- ரூ 6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க பாரத் ஃபோர்ஜ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- உலகளவில் குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
- உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகால பொருளாதாரத்தில் 105 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தரவறிக்கையில் கூறியுள்ளது.
- மதுரையில் ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’திட்டத்தை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தொடங்கி வைத்தார்.
- 2025 – ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த செபக் தக்ரா உலகக் கோப்பையில், ஆண்கள் ரெகு அணி, நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.