22rd March Daily Current Affairs – Tamil

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன்:

  • நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது.
  • உலக அளவில் 5 – ஆவது பெரிய பொருளாதாரமான இந்தியாவின் மின் உற்பத்தி மற்றும் பல்வேறு துறைகளில் எரிபொருளாக நிலக்கரி பெருவாரியாக பயன்படுத்தப்படுகிறது.
  • நாட்டின் முக்கிய எரிபொருள் ஆதாரமாக நிலக்கரி விளங்குகிறது.
  • எரிபொருள் தேவையில் சுமார் 55 சதவீதம் நிலக்கரியை சார்ந்துள்ளது.
  • நாட்டில் 74 சதவீத மின்சாரம், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.
  • மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி.

ஊதா திருவிழா:

  • மாற்றுத்திறனாளிகளின் திறமைகள், சாதனைகள் மற்றும் அபிலாஷைகளைக் கொண்டாடும் வகையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தில் ‘ஊதா  திருவிழாவுக்கு’ மார்ச் 21, 2025 இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஊதா திருவிழா’ பல்வேறு குறைபாடுகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சமூகத்தில் குறைபாடுகள் உள்ள நபர்களைப் புரிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது மற்றும் சேர்ப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மார்ச் 22: உலக தண்ணீர் தினம்

  • மார்ச் 22 அன்று, நன்னீர் நீர்வளங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நன்னீர் வளங்களின் நிலையான மேலாண்மையை ஆதரிக்கவும் ஆண்டுதோறும் உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு மாநாட்டில் (UNCED) இதைக் கொண்டாட பரிந்துரைக்கப்பட்டது.

மார்ச் 22: பீகார் திவாஸ்

  • பீகார் மாநிலம் உருவானதைக் குறிக்கும் வகையில் மார்ச் 22 அன்று பீகார் திவாஸ் அல்லது பீகார் தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  2. தமிழக சுற்றுலாத் துறை சார்பில், வெளிமாநில முதலீடுகளை ஈா்க்கும் வகையில், ‘தமிழ்நாடு பயண சந்தை’சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது.
  3. துனிசியாவில் புதிய பிரதமராக சர்ரா ஜாஃபரானி நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. துனிசியாவில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் துனிசியா பிரதமர் கமெல் மடௌரியை பதவி நீக்கம் செய்து துனிசியா அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டார்.
  5. ராஜேந்திர சிங் “இந்தியாவின் வாட்டர்மேன்” என்றும் அழைக்கப்படும் இவர், 2001ல் மகசேசே விருதையும் , 2015ல் ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசையும் வென்றார்.
  6. இவர் இந்தியாவின் ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நீர் பாதுகாப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
  7. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தியா மாஸ்டர்ஸ் அணி இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these