10th March Daily Current Affairs – Tamil

நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயா்வு:

  • மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58 – ஆக உயா்ந்துள்ளது.
  • மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்காவை, நாட்டின் 58-ஆவது புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் அறிவித்தார்.
  • இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்கள் 1973 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டன.
  • அவை இந்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி:

  • இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 12 – வது பதிப்பு கஞ்சர்-XII மார்ச் 10 முதல் மார்ச் 23 வரை கிர்கிஸ்தானில் நடைபெற உள்ளது.
  • 2011 – இல் தொடங்கப்பட்டதிலிருந்து, Ex KHANJAR XII வருடாந்திர பயிற்சி நிகழ்வாக உருவெடுத்துள்ளது.
  • இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியான ‘கஞ்சர்-XII’- க்கு இந்திய ராணுவக் குழு புறப்பட்டது.
  • இதே பயிற்சியின் கடைசி பதிப்பு ஜனவரி 2024 – இல் இந்தியாவில் நடத்தப்பட்டது.

மார்ச் 10: CISF நிறுவன தினம்.

  • இந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைகளை (CISF) கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 ஆம் தேதி CISF நிறுவன தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.
  • மேலும் இந்த ஆண்டு 56 வது நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
  2. அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்து வைத்தார்.
  3. பெண்கள் அதிகாரமளிப்பதில் பங்களித்ததற்காக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் யசோதா சண்முகசுந்தரத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஔவையார் விருதை வழங்கினார்.
  4. உலகின் மிகச் சிறந்த பில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இளையராஜா சிம்பொனியை அணைமையில் அரங்கேற்றினார். இதன்மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.
  5. கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
  6. கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
  7. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3 – வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these