3rd February Daily Current Affairs – Tamil

100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளில் பின்னடைவு: இஸ்ரோ

  • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இஸ்ரோ அமைப்பின் 100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோளை, ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயா்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்தது.
  • இந்தியாவில் தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பயன்பாட்டுக்கு உதவும் மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (ஐஆா்என்எஸ்எஸ்) திட்டத்தின் கீழ், என்விஎஸ்-02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
  • 2,250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடா் காலங்களில் துல்லியமான தகவல்களை அளிக்கும்.
  • இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
  • இதன்மூலம், 100-ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, இஸ்ரோ சாதனை படைத்தது.

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்கள்:

  • கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் நீா்நிலைகளில் விடப்படுவது குறித்த மனுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விசாரித்தது.
  • அந்த 2 வெளிநாட்டு மீன் இனங்கள் கம்புசியா அஃபினிஸ் (கொசு மீன்), பொசிலியா ரெட்டிகுலாட்டா (கப்பி) ஆகும்.
  • தேசிய பல்லுயிர் ஆணையம் இந்த இரண்டு மீன் இனங்களையும் அயல் உயிரினங்களாக அறிவித்துள்ளது. ஏனெனில், இவை உள்நாட்டு மீன் இனங்களுக்கு உணவு பற்றாக்குறையை ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூா் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை மோசமாக பாதிக்கும்.
  • உலகின் 100 மோசமான அயல் உயிரினங்களில் கொசு மீனும் இடம்பிடித்துள்ளதாக நிபுணா் குழு கூறுகிறது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இவ்வகை மீன்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கொசு மீன்களும் மகாராஷ்டிரம், கா்நாடகம், பஞ்சாப் மற்றும் ஒடிஸாவில் கப்பி மீன்களும் நீா்நிலைகளில் விடப்பட்டுள்ளன.

ராம்சர் தலங்களை மேம்படுத்தத் திட்டம்:

  • தமிழகத்தில் ஏற்கெனவே 18 ராம்சா் தலங்கள் உள்ள நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரகோட்டை மற்றும் தோ்த்தங்கல் பறவைகள் சரணாலயங்களும் ராம்சார் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த சரணாலயங்கள் நீா் பறவை இனங்களுக்கு ஒரு முக்கியமான இனப்பெருக்கம் மற்றும் உணவு தேடும் இடமாகும்.
  • தமிழகத்தில் உள்ள ராம்சர் தலங்களை பாதுகாக்கவும், அதை மேம்படுத்தவும் மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • முதற்கட்டமாக 13 ராம்சர் தலங்களுக்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இதைத்தொடா்ந்து புதிதாக அறிவிக்கப்பட்ட 2 ராம்சா் தலங்கள் மற்றும் மீதமுள்ள 5 ராம்சர் தலங்களையும் மேம்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்ட அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிசிசிஐ விருதுகள்:

  • இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
  • கடந்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனைக்கான விருது இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.
  • அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ-ன் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
  • சர்வதேச போட்டிகளில் சிறந்த அறிமுக வீரர் விருது – சர்ஃபராஸ் கான்
  • சர்வதேச போட்டிகளில் சிறந்த அறிமுக வீராங்கனை – ஆஷா சோபனா
  • ஒருநாள் போட்டிகள் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தீப்தி சர்மாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
  • உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டமைக்கான விருது – தனுஷ் கோட்டியான்
  • சிறந்த கிரிக்கெட் சங்கத்துக்கான விருது மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.
  • உள்ளூர் போட்டிகளுக்கான சிறந்த நடுவருக்கான விருது அக்‌ஷய் டோட்ரேவுக்கு வழங்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  • தாவரத்தின் அடிப்படையிலான ரசாயனம் சாராத இயற்கை அழகுசாதன பொருள்களை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆயுா்வேத நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
  • தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா.
  • மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால்.
  • புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ 7 லட்சத்தில் இருந்து ரூ 12 லட்சமாக உயா்த்தப்படுவதாகவும், ஆண்டு வருமானம் ரூ 12 லட்சத்துக்கும் மேல் உள்ள தனிநபா்களுக்கு வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தோனேசிய தலைநகா் ஜகார்த்தாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள புதிய முருகன் கோயில் நீண்டகால பாரம்பரியத்தின் பொற்காலமாக அறியப்படவுள்ளது.
  • ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங்.
  • தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ 10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
  • பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ஆம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, இந்த தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கிராமத்தில் சர்வதேச தரத்திலான வாட்டர் ஸ்போர்ஸ் அகாதெமி அமைக்கப்பட உள்ளது.
  • ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரூ 42.90 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதெமி பயிற்சி மையம்அமைக்கப்பட்டு வருகிறது.
  • தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் நீச்சல் 50 மீ. பட்டா்ஃபிளை பிரிவில் தமிழகத்தின் பெனடிக்டன் ரோஹித் தங்கப் பதக்கம் வென்றார்.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these