20th January Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் JANUARY 20

 

நடிகை ஹேமமாலினிக்கு உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் விருது:

  • பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரான உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் நினைவு நாளையொட்டி மும்பையில் ‘ஹாஸ்ரி’ இசை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
  • அந்த வகையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள ‘ஜியோ’ பன்னாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஹேமமாலினிக்கு ‘பத்ம விபூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான்’ விருது வழங்கப்பட்டது.
  • இந்திய கலை மற்றும் கலாசாரத்தில் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து, ஹேமா மாலினிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வழங்கினார்.

சக்திசாட் மிஷன்: விண்வெளி தொழில்நுட்பத்தில் 12,000 சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல்.

  • 2026 – ஆம் ஆண்டில் இஸ்ரோவின் சந்திரயான்-4 திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள் ஏவப்படுவதை இலக்காகக் கொண்டு 108 நாடுகளைச் சேர்ந்த 14-18 வயதுடைய 12,000 சிறுமிகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சக்திசாட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்அப் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, 108 நாடுகளைச் சேர்ந்த 14-18 வயதுடைய 12,000 சிறுமிகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு சக்திசாட் பணியைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்முயற்சியானது விண்வெளித் துறையில் திறன் மேம்பாட்டை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், உலக அளவில் இளம் பெண்களை ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் முயல்கிறது.
  • ShakthiSAT பணியானது விண்வெளி தொழில்நுட்பம், பேலோட் மேம்பாடு மற்றும் விண்கல அமைப்புகளின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட 120 மணிநேர ஆன்லைன் பயிற்சியை உள்ளடக்கியது.
  • இந்த முயற்சியில் பங்கேற்கும் நாடுகளில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரேசில், கென்யா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கிரீஸ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும்.

ஜனவரி 20: பெங்குயின் விழிப்புணர்வு தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20 அன்று, பென்குயின் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  • சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநராக ஞானேந்திர பிரதாப் சிங் நியமனம்.
  • சிஆா்பிஎஃப் டிஜியாக இருந்த அனீஷ் தயாள் சிங் ஓய்வுபெற்றார், அதன்பிறகு சிஆா்பிஎஃப் பொறுப்பு அதிகாரியாக விதுல் குமார் நியமிக்கப்பட்டார்.
  • கேரள மாநிலம், சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம்  திட்டமிட்டுள்ளது.
  • முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமைக்குரிய கொச்சி சா்வதேச விமான நிலைய நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
  • கொச்சி சா்வதேச விமான நிலையமானது, முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற சிறப்பை கடந்த 2015 – இல் எட்டியது.
  • ஜனவரி 25 – ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது, இந்த தினத்தில்தான் இந்திய தோ்தல் ஆணையம் அமைக்கப்பட்டது.
  • நாட்டில் 1951-52 ஆம் ஆண்டில் முதல்முறையாகத் தோ்தல் நடைபெற்றது.
  • குடிமைப் பணி தோ்வா்களின் மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை தோ்வு நிறைவடைந்தவுடன் வெளியிட கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பயங்கரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய இந்தியா-இத்தாலி முடிவெடுத்துள்ளது.
  • பயங்கரவாத தடுப்பு மற்றும் முறைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தடுப்பு தொடர்பாக இந்தியா-இத்தாலி இடையேயான  கூட்டுப் பணிகள் கூட்டம் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்றது.
  • ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தில், மா்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது.
  • டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது 100 கேட்ச்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார்.
  • திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே 600 ஆண்டுகள் பழைமையான போர் வீரர்கள் நடுகல் கண்டுடெடுக்கப்பட்டது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these